Sunday, January 31, 2016

சீசன் தொடங்க உள்ளதையொட்டி கொடைக்கானலில் பூச்செடிகள் நடவு பணிகள் தீவிரம்


 : 
கொடைக்கானல்,
சீசன் தொடங்க உள்ளதையொட்டி கொடைக்கானலில் பூச்செடிகள் நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பூச்செடிகள் நடவுப்பணிதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குளு, குளு சீசன் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் 2–வது வாரம் வரை இருக்கும். அப்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருவார்கள்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா ஆகியவற்றில் லட்சக்கணக்கான பூக்கள் பூத்துக்குலுங்கும். இதற்கான செடிகள் அனைத்தும் தோட்டக்கலைத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சீசன் தொடங்குவதற்கு முன்பே நடவு செய்யப்படுகின்றன. அதன்படி இந்த ஆண்டிற்கான பூச்செடிகள் நடவுப்பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
பல வண்ணப்பூக்கள்
இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘சீசன் தொடங்குவதையொட்டி பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா ஆகியவற்றில் உயர்ரக பூச்செடிகளான டேரியா, ஆக்டர்டெலிபீனியம், சப்னேரியன், சுவிட்வில்லியம், ஆர்ணமண்டல் கேபேஜ், கோரியாப்சிஸ் போன்ற செடிகள் லட்சக்கணக்கில் நடவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த செடிகளில் இருந்து பல வண்ணங்களில் கண்ணை கவரும் வகையில் பூக்கள் பூக்கும்.
மேலும் 2 பூங்காக்களிலும் செடிகளை நடவு செய்யும் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளன. கொடைக்கானலில் மே மாதத்தில் தான் பூக்கள் பூப்பதற்கான கால நிலை உருவாகும். எனவே அந்த கால கட்டத்தில் பூக்கும் செடிகளாகவே நடவு செய்யப்பட்டுள்ளன. இதனை காண வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக உறவினர்களுடன் சுற்றுலா தலங்களை பார்வையிடுவார்கள்’ என்றனர்.

Source : Dailythanthi

உழவர்சந்தையில் கடந்த மாதம் ரூ.1¼ கோடிக்கு காய்கறிகள் விற்பனை



பொள்ளாச்சி,
பொள்ளாச்சி உழவர்சந்தையில் கடந்த ஜனவரி மாதம் ரூ.1 கோடியே 46 லட்சத்து 71 ஆயிரத்து 635–க்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையாகி உள்ளன.
உழவர்சந்தைபொள்ளாச்சியில் உழவர்சந்தை கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு 80 கடைகள் உள்ளன. சந்தைக்கு பொள்ளாச்சியை சுற்றி உள்ள கிராமங்கள் மற்றும் ஆனைமலை, கிணத்துக்கடவு, பெதப்பம்பட்டி, சுல்தான்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகள், பழங்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
விவசாயிகள் சரக்கு வாகனங்களிலும், அரசு பஸ்களிலும் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். மேலும் இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் 5 லட்சத்து 71 ஆயிரத்து 105 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவைகள் ரூ.1 கோடியே 46 லட்சத்து 71 ஆயிரத்து 635–க்கு விற்பனை செய்யப்பட்டது. 2 ஆயிரத்து 481 விவசாயிகள் தங்களது விளைபொருட்களை உழவர்சந்தை மூலம் விற்பனை செய்துள்ளனர். இவற்றை 95 ஆயிரத்து 324 பேர் வாங்கி சென்றுள்ளனர்.
விற்பனை குறைவுகடந்த டிசம்பர் மாதம் ரூ.1 கோடியே 52 லட்சத்து 51 ஆயிரத்து 430–க்கு விற்பனையானது. இதை ஒப்பிட்டு பார்க்கும் போது ஜனவரி மாதம் ரூ.5¾ லட்சத்துக்கு விற்பனை குறைந்துள்ளது. இது குறித்து உழவர்சந்தை அதிகாரிகள் கூறியதாவது:–
கடந்த டிசம்பர் மாதத்தை காட்டிலும், ஜனவரி மாதம் உழவர் சந்தைக்கு காய்கறிகள், பழங்கள் வரத்து அதிகரித்து இருந்தது. ஆனால் விலை குறைவாக இருந்ததால் விற்பனை தொகை குறைந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Source : Dailythanthi

2.27 லட்சம் டன் நெல் கொள்முதல்

தஞ்சை அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் நடப்பு சம்பா 2016ல் நெல் கொள்முதல் பருவத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் வைத்திலிங்கம், காமராஜ், ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளர் சிவதாஸ்மீனா, தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர் பாலசந்திரன் வரவேற்றார். 

கலெக்டர்கள் தஞ்சை சுப்பையன், திருவாரூர் மதிவாணன், நாகப்பட்டிணம் பழனிச்சாமி ஆகியோர் விளக்க உரையாற்றினர். உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசும்போது, கடந்த நான்கே முக்கால் ஆண்டில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு இதுவரை ரூ.376 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கொள்முதல் பருவம் 2015-16ம் ஆண்டில் டெல்டா அல்லாத மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மட்டுமின்றி கூட்டுறவுத்துறை, முதன்மை விவசாய  கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் சம்மேளனம் மூலமாக விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று  17 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக ஈரப்பதத்தை உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. உடனுக்குடன் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் தேவைக்கேற்ப கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு மாவட்ட கலெக்டர்களுக்கு அனுமதியளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது செயல்பட்டு வரும் 1230 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 2.27 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 300 மூட்டைகளுக்கு மேல் வைத்திருக்கும் பெருவிவசாயிகள் வசதிக்காக அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல் செய்ய நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல் முழுவதும் கொள்முதல் நிலையங்களிலிருந்து லாரிகள் மூலம் நவீன அரிசி ஆலைகள், தனியார் அரவை முகவர்கள், அரசு சேமிப்புக் கிடங்குகள் திறந்தவெளி சேமிப்பு நிலையங்கள், ரயில் தலைப்புகள் ஆகிய இடங்களுக்கு தினந்தோறும் இயக்கம் செய்யப்படும். வெளி மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் தனியார் அரிசி ஆலைகளுக்கு ரயில் வேகன்கள் மூலம் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, நாகப்பட்டிணம், திருவாரூர், நீடாமங்கலம், பேரளம் ஆகிய ரயில் தலைப்புகளிலிருந்து தினந்தோறும் நெல் இயக்கம் செய்ய முன்னேற்பாடு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் ஏதுமின்றி சீரான கொள்முதல் நடைபெற மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நெல் கொள்முதல் சம்பந்தமாக புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகங்களில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு தஞ்சை 04362-236823, திருவாரூர் 04366-226899, நாகப்பட்டிணம் 04365-251353, சென்னை நிர்வாக இயக்குனர் அலுவலகம் 94451-90660, 94451-90661, 94451-90662 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்றார்.

Source: Dinakaran

மண்மாதிரி ஆய்வு செய்து விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம்

கரூர் மாவட்டத்தில் வேளாண்மையை மேம்படுத்தும் திட்டமாக மண்மாதிரி எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகளுக்கு மண் மாதிரியை பரிசோதித்து விபரம் தெரிவித்தால் அதன்படி மண்ணுக்கேற்ற சாகுபடி பணிகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும். இதற்காக மண்மாதிரி ஆய்வு திட்டம் உருவாக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 40ஆயிரம் விவசாய நிலங்களில் மாதிரி எடுத்து ஆய்வு செய்து ஒருங்கிணைந்த கையேடு வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக  ரூ.40 லட்சம் செலவில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த நடமாடும் ஆய்வகத்தில் 5 விதமான உபகரணங்கள் உள்ளன. மண்ணில் உள்ள நுண்ணூட்ட சத்துக்களான துத்தாகம், இரும்பு, தாமிரம் மாங்கனீஷ் சத்துக்களை கண்டறிதல். மண்ணின் சுண்ணாம்புநிலை, தழைச்சத்து, கண்டறியும் வசதியும் உள்ளது. ஆய்வக ஊர்தியை கிராமங்களுக்கு நேரடியாக கொண்டு சென்று விவசாயிகள் மண்மாதிரிகளை ஆய்வு செய்து உடனடியாக மாதிரி அறிக்கைகளை அளிப்பது கரூர் மாவட்டத்தில உள்ள அனைத்து வட்டாரத்திற்கும் சென்று விவசாயிகளிடம் மண்மாதிரி பெற்று பரிசோதனை முடிவுகளைஉடனடியாக அறிவிக்கும் நோக்கில் துவக்கப்பட்ட திட்டம் மந்த கதியில்உள்ளது.சுமார் 10 ஆயிரம் விவசாயிகள் நிலத்தில் மண்மாதிரி எடுக்கப்பட்டது. ஆனால் ஆய்வு முடிவுகள் இன்னும் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருக்கிறது. ஆய்வு முடிவுகள் அடங்கிய அட்டையை பயனாளிகளுக்கு விரைவில் வேளாண்துறை வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேளாண்துறையினர் கூறுகையில், விரைவில் பரிசோதனை முடிவுகளை தெரிவிக்கும் வகையில் அட்டை வழங்கப்படும் என்றனர்.

Source : Dinakaran

ஒருகிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி

தா.பேட்டை அடுத்த தேவானூர் கிராமத்தில் அட்மா திட்டத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. 
நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்து பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது. ஊராட்சி துணை தலைவர் கனகராஜின் நிலக்கடலை சாகுபடி வயலில் உரமிடுதல்,  நீர்பாய்ச்சுதல்,  களைஎடுத்தல்,  ஜிப்சம் இடுதல்,   ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அட்மா திட்ட செயல்பாடுகள் மற்றும் பயிற்சி குறித்து வட்டரா தொழில்நுட்ப மேலாளர் வரகுணபாண்டியன் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். தேவானூர், தேவானூர் புதூர், செவந்தாம்பட்டி மற்றும் பெருகனூர் கிராமங்களை சேர்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சி ஏற்பாடுகளை வேளாண்மை துணை அலுவலர்கள் பிரசாத், சதீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

Source : Dinakaran

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 50% விவசாயிகள்

"மத்திய அரசின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 சதவீத விவசாயிகளை சேர்க்க வேண்டும்; இந்த இலக்கை 2 ஆண்டுகளில் அடைவதற்கு உறுதியேற்க வேண்டும்'' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதுதொடர்பாக நாட்டு மக்களுக்கு அவர் "மனதின் குரல்' (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சியின் மூலம் ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரை:
நமது நாட்டில், விவசாயிகளின் பெயரில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதுதொடர்பான விவாதத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால், விவசாயிகள் முக்கியப் பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றனர்.
இயற்கைப் பேரிடரின்போது, அவர்களின் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகி விடுகிறது. அவர்களின் ஓராண்டு உழைப்பும் வீணாகிறது. அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கருதியபோது, எனக்கு ஒன்றே ஒன்றுதான் நினைவுக்கு வந்தது. அதுவே, பயிர்க் காப்பீட்டுத் திட்டம்.
2016ஆம் ஆண்டில், விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்ற மிகப் பெரிய பரிசை மத்திய அரசு கொடுத்துள்ளது. அந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம், அது புகழப்பட வேண்டும் என்றோ அல்லது பிரதமரை மக்கள் வரவேற்க வேண்டும் என்பதற்கோ அல்ல.
பயிர்க் காப்பீடு தொடர்பாக பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது. ஆனால், அத்தகைய திட்டங்களால் நாட்டில் உள்ள 20 முதல் 25 சதவீத விவசாயிகள் கூட பயனடைந்தது கிடையாது. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில், அடுத்த 2 ஆண்டுகளில் குறைந்தது 50 சதவீத விவசாயிகளை இணைப்போம் என்று நாம் உறுதி ஏற்போமா? இதற்கு உங்களின் உதவி எனக்குத் தேவை. ஏனெனில், இந்தத் திட்டத்தில் விவசாயி சேரும்பட்சத்தில், இயற்கைப் பேரிடரின்போது அவருக்கு பெரிய அளவில் உதவி கிடைக்கும்.
முன்பு போல அல்லாமல், இந்த முறை மத்திய அரசின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு இந்த திட்டம் விரிவானதாகவும், எளிமை மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடு கொண்டதாகவும் இருப்பதுவே காரணம் ஆகும். இந்த திட்டத்தின் சிறப்பு, இது மட்டுமல்ல. இதில் சேரும் விவசாயிகளுக்கு, அறுவடைக்குப் பிறகு 15 நாள்கள் கழித்து பயிர்களுக்கு எது நிகழ்ந்தாலும், அதற்கும் நிச்சயம் இழப்பீடு கிடைக்கும். இந்த திட்டத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், இழப்பு குறித்த மதிப்பீடு, இழப்பீட்டுத் தொகை விநியோகம் ஆகிய பணிகள் விரைந்து முடிப்பது உறுதி செய்யப்படும்.
அதேபோன்று, காப்பீட்டுத் திட்டத்துக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர பிரீமியம் தொகையும் மிகவும் குறைவாகும். கரீப் பருவத்துக்கு 2 சதவீதமும், ரபி பருவத்துக்கு ஒன்றரை சதவீதமும் ப்ரீமியம் தொகை செலுத்தினால் போதும்.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம்: நாடு முழுவதும் கடந்த 16ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட "ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டம் இளைஞர்களுக்கு புதிய சக்தியை அளித்திருக்கிறது. முன்பு புதியன தொடக்கம் என்பது, தகவல் தொழில்நுட்ப துறையில்தான் சாத்தியம் என்ற தவறான புரிதல் இருந்தது. ஆனால் தற்போது, இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயம் உள்பட அனைத்துத் துறைகளிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்பது தெளிவாகி விட்டது.
ஹரியாணாவில் மத்திய அரசால் தொடக்கி வைக்கப்பட்ட "பெண் குழந்தைகளை காப்பாற்றுவோம்; பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்' திட்டத்தால் சமூகத்தில் உண்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெண் குழந்தைகளைக் கொல்லும் சம்பவம் நடைபெற்ற அந்த மாநிலத்தில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் தற்போது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என்றார் நரேந்திர மோடி.
சுமார் 30 நிமிட வானொலி உரையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல், அழகுபடுத்துதல் குறித்தும், மறைந்த தலைவர்களின் சிலைகளை சுத்தமாகப் பராமரித்தல், அஸ்ஸôம் மாநிலம், குவாஹாட்டியில் விரைவில் நடைபெறவுள்ள தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டி, 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகள் குறித்தும் பேசினார்.
தனது வானொலி உரையைக் கேட்க வேண்டுமெனில், 81908 81908 என்ற செல்லிடப் பேசி எண்ணுக்கு செல்லிடப் பேசியில் இருந்து "மிஸ்டு கால்' கொடுத்தால் கேட்கலாம் என்றார் மோடி.

வேமூலா விவகாரம் குறித்து பேசாததற்கு காங்கிரஸ் கண்டனம்

மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ரோஹித் வேமூலா குறித்து பிரதமர் மோடி பேசாததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியது:
தலித் மாணவர் தற்கொலை விவகாரத்தை முன்வைத்து, நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது. ஆனால், அதுகுறித்து வானொலி உரையில் மோடி குறிப்பிடவேயில்லை.
இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, பண்டாரு தத்தாத்ரேயா மீது பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்மூலம், கடந்த வானொலி உரையில் வேமூலா குறித்து அவர் ஒப்புக்குத்தான் அனுதாபம் தெரிவித்திருக்கிறார் என்பது தெரிகிறது என்றார் அவர்.

Source : Dinamani


Friday, January 29, 2016

தேவையற்ற முடிகளை அகற்றும் மஞ்சள்

, May be added to the diet, be a disinfectant, removing unwanted hair, with nature, and includes a lot of good medicinal properties of turmeric

உணவில் சேர்க்க கூடியதும், கிருமி நாசினியாக விளங்குவதும், தேவையற்ற முடிகளை அகற்றும் தன்மை கொண்டதும், ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியதுமான மஞ்சளின் மருத்துவ குணங்கள் பற்றி நாம் பார்ப்போம்.பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மஞ்சள் அற்புதமான வலி நிவாரணியாக பயன்படுகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. வீக்கத்தை கரைக்க கூடியது. வலியை குறைக்கவல்லது. ஈரலுக்கு இது ஆரோக்கியத்தை தருகிறது. 

ஈரல் நோய்களை போக்குகிறது. ஈரலை நோய் தாக்காமல் பாதுகாக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கும் மருந்தாக மஞ்சள் விளங்குகிறது. தோல் நோய்களை குணப்படுத்துகிறது. பச்சையான மஞ்சள் கிழங்கை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கான தேனீர் தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: பச்சை மஞ்சள் கிழங்கு, நெல்லி வற்றல் பொடி. தோல் நீக்கப்பட்ட மஞ்சள் கிழங்கு பசை அரை ஸ்பூன் எடுக்கவும். 

இதனுடன் ஒரு ஸ்பூன் நெல்லி வற்றல் பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி 50 முதல் 100 மில்லி வரை குடித்துவர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். உடலுக்கு புத்துணர்வு ஏற்படும். கொழுப்பு சத்து குறையும். ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாது. பச்சை மஞ்சள் கிழங்கை பயன்படுத்தி முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றும் மருந்து தயாரிக்கலாம். 

சிறிது அரிசி மாவுடன், மஞ்சள் கிழங்கு பசையில் இருந்து எடுக்கப்பட்ட சாறு சேர்த்து கலக்கவும். தேவையற்ற முடிகள் இருக்கும் இடத்தில் இதை பூசவும். இரவு முழுவதும் விட்டு காலை எழுந்தவுடன் கழுவிவர தேவையற்ற முடிகள் போகும். மஞ்சள் கிழங்கை பயன்படுத்தி கால் ஆணிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். 

தேவையான பொருட்கள்: மஞ்சள் கிழங்கு, வசம்பு பொடி, புங்க எண்ணெய், கற்பூரம், மருந்தாணி பொடி. சிறிது புங்க எண்ணெயுடன், அரைத்து வைத்த மஞ்சள் விழுதை சேர்க்கவும். இதனுடன் சிறிது கற்பூரம், மருதாணி இலைப்பொடி, வசம்பு பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை ஆற வைத்து வடிக்கட்டி வைத்துக்கொண்டு பூசினால் கால் ஆணி சரியாகும். கால் ஆணியால் ஏற்படும் வலி மறையும். 

வடு இல்லாமல் போகும்.மஞ்சள் கிழங்கை பயன்படுத்தி அடிபட்ட வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம். மஞ்சள் கிழங்கு விழுதுடன் சிறிது உப்பு சேர்க்கவும். இதனுடன் நீர்விட்டு கலந்த சுண்ணாம்பு சேர்க்கவும். லேசாக சூடு செய்யவும். இதை எடுத்து பற்றாக போடும்போது அடிப்பட்ட வீக்கம், சுளுக்கு சரியாகும். மஞ்சளில் பல்வேறு நன்மைகள் உள்ளன. மஞ்சளில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. உணவில் சேர்க்கப்படும் மஞ்சள் கிருமி நாசினியாக விளங்குகிறது. 

Source : Dinakaran

வேளாண் கருவிகள் வாடகை மையம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


T
தேவகோட்டை,
தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் தேர்போகியில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கருவிகள் வாடகை மையத்தை மாவட்ட கலெக்டர் மலர்விழி திறந்து வைத்தார்.
வாடகை மையம்சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி வட்டம், தேர்போகி ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் கருவிகள் வாடகை மைய தொடக்க விழா நடந்தது. வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் கேசவன் அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி பேசியதாவது:–
மாவட்டத்தில் முக்கியப் பயிரான ‘‘நெல் பயிர்’’ மற்றும் பயறு வகைகள், தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களை ஒரே இடத்தில் சேகரித்து அனைத்து விவசாயிகளுக்கும் நியாயமான வாடகையில் கிடைக்க ‘‘வேளாண் கருவிகள் வாடகை மையம்’’ உருவாக்கப்பட்டுள்ளது.
மானியம்இந்த மையத்தின் சார்பாக விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகளின் குழுமம் அமைக்கப்பட்டு, அந்த மையத்திற்கு அரசு மானியமாக ரூ.10 லட்சம் வழங்க உள்ளது. இந்த மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களை விவசாயிகள் நியாயமான வாடகைக்கு பெற்று தங்களுடைய அனைத்து வேளாண் பணிகளையும் தடையின்றி மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் செல்விபாண்டி, தேர்போகி ஊராட்சி தலைவர் தனபாக்கியம், விருதுநகர் கண்காணிப்புப் பொறியாளர் (வேளாண்மை) தெய்வேந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் குருமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி செயற்பொறியாளர் மனோகர்ஹென்றி சத்யசீலன் நன்றி கூறினார்.

Source :Dailythanthi

தோவாளை மார்க்கெட்டில் முல்லை பூ விலை ரூ.800 உயர்வு ஒரு கிலோ ரூ.1000–க்கு விற்பனை


நாகர்கோவில்,
தோவாளை பூ மார்க்கெட்டில் முல்லை பூ விலை நேற்று ரூ.800 உயர்ந்து காணப்பட்டது. இதனால் ஒரு கிலோ ரூ.1000–க்கு விற்பனை செய்யப்பட்டது.
பூ மார்க்கெட்நாகர்கோவில் அருகே உள்ள தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் குமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி நெல்லை, மதுரை உள்பட பல இடங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.
விவசாயிகள் அதிகாலையிலேயே பூக்களை கொண்டுவருவதால், வியாபாரிகளும் அதிகாலையிலே மார்க்கெட்டிற்கு வந்துவிடுவார்கள். இதனால் அதிகாலையிலோ வியாபாரம் தொடங்கிவிடும். பூக்கள் இங்கு சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்படும். இதனால் மார்க்கெட் அதிகாலையில் இருந்து பரபரப்பாக இருக்கும்.
முல்லை விலை உயர்வுஇந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.200–க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூ, நேற்று விலை ரூ.800 உயர்ந்து காணப்பட்டது. இதனால் ஒரு கிலோ ரூ.1000–க்கு விற்பனை செய்யப்பட்டது. முல்லை பூவின் விலை உயர்வு குறித்து பூ வியாபாரி விஸ்வநாதன் கூறுகையில் ‘‘ இன்று (நேற்று) வெள்ளிக்கிழமை என்பதாலும், முகூர்த்த தினம் என்பதாலும் முல்லை பூவின் தேவை அதிகமாக இருந்தது. அதே சமயம் முல்லை பூவின் வரத்து மார்க்கெட்டிற்கு குறைவாக இருந்தது. இதனால் குறைந்த அளவில் இருந்த பூக்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர். இதனால் தான் விலை உயர்ந்து காணப்பட்டது’’ என்று கூறினார்.
விலை விவரம்மேலும், மற்ற பூக்களின் விலை விவரம் வருமாறு:– பிச்சி ரூ.1400–க்கும், மல்லிகை ரூ.1000–க்கும், கனகாம்பரம் ரூ.350–க்கும், ஸ்டெம்புரோஸ் ரூ.120–க்கும், மருக்கொழுந்து ரூ.100–க்கும், வெள்ளை சிவந்தி ரூ.100–க்கும், பட்டன்ரோஸ் ரூ.90–க்கும், கொழுந்து ரூ.80–க்கும், சம்பங்கி ரூ.80–க்கும், அரளி ரூ.40–க்கும், வாடாமல்லி ரூ.40–க்கும், கேந்தி ரூ.30–க்கும், துளசி ரூ.25–க்கும், மஞ்சள்கேந்தி ரூ.15–க்கும், மாம்பழ கேந்தி ரூ.10–க்கும், பச்சை ரூ.6–க்கும், தாமரை (100 எண்ணம்) ரூ.200–க்கும், ரோஜா (100 எண்ணம்) ரூ.30–க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Source : Dailythanthi

மிளகாய்,வாழைக்கு இன்சூரன்ஸ்:வேளாண் காப்பீட்டு நிறுவனம் தகவல்


சிவகங்கை மாவட்டத்தில் 2015-16ம் ஆண்டு ராபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள மிளகாய், வாழை பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பிரிமியதொகை செலுத்தி காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.

தோட்டக்கலை துணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் மிளகாய் பயிர் 10 ஆயிரம் ஏக்கரிலும், வாழை 1250 ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பயிர் அதிகம் பயிரிடப்படும் வட்டாரங்களான சிவகங்கை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, சிங்கம்புணரி, எஸ்.புதூர், மற்றும் திருப்புவனம் வட்டாரங்களில் பயிர் வாரியாக தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மிளகாய்: இளையான்குடி, காளையார்கோயில், எஸ்.புதூர், திருப்புவனம்.பிரிமிய தொகை: ஏக்கருக்கு இயல்பான காப்பீட்டு தொகை ரூ.5931.காப்பீட்டு திட்டத்தில் சேர கடன் பெறும் விவசாயிகள் ரூ.326, கடன் பெறாத விவசாயிகள் ரூ. 294 செலுத்த வேண்டும்.வாழை: ஒக்கூர் பிர்க்கா, பெரியகோட்டை, சிவகங்கை, தமறாக்கி. அ.திருஉடையார்புரம் பிர்க்கா,புளியால், மானாமதுரை,முத்தனேந்தல், செய்களத்தூர் பிர்க்கா, சாக்கோட்டை பிர்க்கா.சிங்கம்புணரி பிர்க்கா, கொந்தகை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம் பிர்க்கா.

பிரிமிய தொகை: ஏக்கருக்கு இயல்பான காப்பீட்டு தொகை ரூ.2,68,549. காப்பீட்டு திட்டத்தில் சேர கடன் பெறும் விவசாயிகள் ரூ.7385, கடன் பெறாத விவசாயிகள் ரூ.6,647 பிரிமியம் செலுத்த வேண்டும்.காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் பயிர் விதைத்த அல்லது நடவு செய்த ஒரு மாத காலத்திற்குள் கணக்கு வைத்திருக்கும் கூட்டுறவு வங்கி அல்லது தேசிய வங்கியில் பிரிமிய தொகையை செலுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source : Dinamalar

Here's how much you should eat dry fruits

Packed with proteins, essential fatty acids, antioxidants and minerals, these are little factories of good health. Since most of the water is extracted from dry fruits, their nutrients are condensed into small packages. But if you are watching your weight, dry fruits should be eaten in moderation as they are nutrient dense in sugars too, and thus calories. Limit the intake to about 20 grams total of mixed nuts and dry fruits and avoid snacking straight from a bag. It leads to overeating.

ALMONDS
Can a high-fat food be good for you? Almonds challenge this oxymoron perfectly well. It's rich in monounsaturated fatty acids that have a heart-protective role and are excellent for your brain and skin health. Almonds are also rich in Vitamin E, magnesium and potassium, all of which go hand in hand to maintain normal blood pressure, improve blood circulation and maintain healthy heart function. Trace minerals like copper and manganese found in almonds have added to their health quotient. Both copper and manganese are needed in very small quantities, but have an important role to play. Eat in small quantities (4-7 pieces) daily to get a whole entourage of health benefits.

WALNUTS
The outer layer of the shelled walnut -the white-ish, flaky, sometimes waxy part has a bitter flavour. But resist the urge to remove it. Research shows that 90 per cent of the antioxidants -including the phenolic acids, tannins, and flavonoids -are found in the skin.Walnuts are excellent sources of Vitamin E in a form that is unusual to find - gamma-tocopherol. It has a major cardio-protective role. Along with great taste and health benefits, they are sources of monounsaturated fats and Omega-3 fatty acids. Add them to salads, desserts or just pop , them daily (3-4 halves).
DATES

Incredibly delicious, dates are one of the most popular fruits packed with an impressive list of essential nutrients, vitamins and minerals, required for normal human growth, wear-n-tear and overall wellbeing. Rich in fructose and dextrose, dates provide simple sugars easily and are a good way to start the day and jump-start the body's metabolism. Enjoy 1-2 medium-sized dates daily. Over indulgence can turn the tables on you.


PISTACHIOS



Symbol of wellness, strength and robust health, pistachios are the evergreen nuts that no one can resist. Pistachios contain more protein in comparison with other nuts like almonds, cashews, hazelnuts, pecans and walnuts; the fat content being the lowest amongst them. They are rich in oleic acid, carotenes and Vitamin E. However, the salted counterparts negate the health quotient. Limit quantities to not more than 20 grams a day.

Source : TOI

Home remedies for diabetes

The sad fact is that it could affect the baby too. According to recent statistics, India has more people with Type 2 diabetes than any other nation. Who likes to take medicines everyday? Insulin and dialysis is even worse experience. And mind you, as opposed to the misconception, eating sweets is not the only cause for this disease. Stress and genes too play a major role in this. Although one cannot do much about it if it's genetic, it definitely doesn't harm to prevent it.

No, you don't have to pop pills everyday. Just a few changes in your foot habits and you can cut the risks to a great extent. Here are some things that you can do at home to prevent diabetes or reduce it if you already are affected by it.

Nobody likes bitter things. But isn't it better to take a fruit or a vegetable instead of medicines? Having bitter gourd juice on an empty stomach has proved to prevent diabetes. If you are too stubborn or enjoy eating bitter gourd, then you could make stuffed karela (bitter bourd) or fry them like chips and have them as a snack. This will not just bring a change in your menu and give a respite to your taste buds, but also be beneficial to your health.

Soak a few seeds (1/4 tsps) of methi in water overnight. First thing after you brush your teeth in the morning, gulp down the methi along with the water.

Jambul fruit is considered as an effective medicine for diabetes considering its effect on pancreas. The seeds too can be dried, powdered and had with water twice a day.

The guava is among those fruits that are available in most times of the year. With its vitamin C property and high fibre content, this is perhaps one fruit that diabetics can fearlessly have. However, a recent study has shown that having guava with its skin can heighten the blood sugar levels, so make sure you peel off the skin before consumption.
Source : TOI

NSAI defends its support to Centre’s cottonseed order


 
The National Seed Association of India (NSAI) has defended its stand in backing the Centre’s Cottonseed Price Control Order.
In a strongly-worded statement, NSAI Executive Director Kalyan B Goswami has blamed Mahyco Monsanto Biotech Limited (MMBL) for monopolising technology licensing, impacting the seed industry.
The association alleged that several small and medium seed firms went out of business as they could not obtain the licence from MMBL due to their restrictive licensing policy.
“The number of cottonseed companies has come down to 50 from about 400 a few years ago,” he said.
He claimed that the majority of the industry was happy about the association’s stand and that only a “handful of them” were acting at the behest of MMBL. He said the NSAI would not allow Monsanto to fight the litigations using its tag in the future.
It said that the MMBL made huge profits while the seed firms ended up with a little share, though they spent huge amounts on research and production.
“The trait value was always decided by MMBL arbitrarily and at high levels without considering the plight of farmers or the firms,” he said.
Responding to the three letters written by representatives by a few multi-national and domestic seed companies recently questioning its decision to support the Price Control Order, he said a balanced regulation (like the one the Centre issued) would be a better option against the Orders issued by individual States.
The Centre has recently taken a decision to announce the cottonseed price at the national level to put a full stop to legal tussles between the States, seed companies and MMBL.
The MMBL, a joint venture between Mahyco and Monsanto, sub-licences the Bt technology to seed firms under an agreement.
The States used to ignore these pacts, indicating a value to royalty. This has become a bone of contention between the States and MMBL.
In today’s statement, the association said it spent a lot of time during the crucial February-April period every year, dealing with difference price orders in different States.
“A balanced one at the national level would solve the problem. It would ensure enough margins for the seed companies to invest in research and development and infrastructure development,” he said.
Source : Business Line 

Pea crop failure: Punjab farmers claim many excluded from govt’s compensation list

Pea farmers in Punjab have claimed that many farmers have been excluded from the list of growers eligible for compensation from the government. The licence of two retailers to sell seeds too have been cancelled on the basis of a government inquiry.
Farmers claim that they had to plough their field after suffering lower than expected harvest from their crop in December.
The Chief Minister had already announced compensation to the tune of Rs 1.56 crore for over 900 farmers and a vigilance bureau inquiry.
Farmers, however, complain that the list of beneficiaries of the government’s compensation excludes many of them. They further said that they were not informed of the rate at which they would receive their compensation.
The seeds for the crop were distributed by the National Seed Corporation (NSC) after receiving the agriculture department. Moreover, the department issues licenses to retailers who sell the seeds to the farmers.
Farmers claim that most of the failed crop were sown using these seeds.
Following an inquiry by the horticulture department, the licence of Harvinder Brar, who runs Brar Seeds, a retailer in Ludhiana, has been cancelled. He has been banned from selling seeds anywhere in Punjab. Another retailer in Hoshairpur has also had his licence cancelled by the department.
“As per the department, the seeds of two varieties were sold together to the farmers. So basically, a farmer may have sown both varieties at the same time on the same field,” said Sukhpal Singh, Chief Agriculture Officer, Ludhiana. “The retailers are also accountable. They should not have accepted sub-standard stock.” Brar said he will challenge this decision.
Director Agriculture, Dr Gurdial Singh said, “If certified seeds of the NSC were being sold, then I don’t think that the dealers are at fault. However, only a vigilance inquiry will help establish the facts of the case. The samples are being checked and action will follow.”
Narinder Singh, a farmer who had purchased seeds from Brar Seeds said, “We had sown in November and in December, the crops simply flowered. No pea grew.”
- See more at: http://indianexpress.com/article/cities/chandigarh/pea-crop-failure-punjab-farmers-claim-many-excluded-from-govts-compensation-list/#sthash.bvJQVyaZ.dpuf

Source : Indian Express

GDP expanded 7.2 % last year, slower than estimated


India’s economy expanded 7.2 per cent in the financial year ended March 2015, marginally slower than the previous estimate of 7.3 per cent. “Real GDP or GDP at constant (2011-12) prices for the years 2014-15 and 2013-14 stands at Rs.105.52 lakh crore and Rs. 98.39 lakh crore respectively, showing growth of 7.2 per cent during 2014-15, and 6.6 per cent during 2013-14,” according to a statement released by the Statistics and Programme Implementation Ministry.
In terms of real Gross Value Added, that is, GVA at constant (2011-12) prices, there has been a growth of 7.1 per cent in 2014-15, as against a growth of 6.3 per cent in 2013-14, according to the statement.
RBI Governor Raghuram Rajan had on Thursday warned that we should be careful about how we measure growth. People are shifting between activities, he said, but it is important that when they shift to a new area, they are creating value.
The overall consensus seems to be that, despite the confusion in the national accounts caused by the revised methodology of computing GDP and GVA, there does not seem to be any other option but to use them.
“Raghuram Rajan has said that you should be careful about the GDP numbers. But these are the official numbers, and you need them as a benchmark,” M Govinda Rao, Professor Emeritus at the National Institute of Public Finance and Policy, told The Hindu.
The buoyancy of the indirect tax numbers have also helped, added Mr Rao.
“Around 80 per cent of economists feel that the way the new GDP numbers are being calculated has yielded in a higher estimate than reality. The belief is that the economy is actually growing at 5-6 per cent,” Ashok Gulati, Infosys Chair Professor at the Indian Council for Research on International Economic Relations said, adding that there was no deliberate attempt to fudge the numbers. The problem lies with the methodology.
The problems with the GDP data come when they are analysed on a sectoral basis and also when they are compared to the other indicators of economic performance.
“If you look at all the other indices, growth in capital stock, exports, agriculture, industrial production, etc, then this (the GDP growth rate) will reconcile with none of them. There needs to be an external committee than can audit these numbers and bring credibility back to the government’s numbers,” said Rajiv Kumar, senior fellow at the Centre for Policy Research.
High-employment sectors such as agriculture are growing very slowly, adding to the concerns. The revised numbers peg the agricultural GVA at 1.3 per cent in 2014-15, up from the 0.6 per cent provisionally estimated earlier. The secondary sector, comprising manufacturing and construction, grew at 5.4 per cent in the same period, down from the estimated 6.5 per cent. The services sector grew at a robust 10.3 per cent.
“What each sector is saying is important. More than 50 per cent of the workforce is employed in agriculture, but the sector is growing at less than 2 per cent. Now, you can say that there was a drought, but it is the job of government policy to deal with such situations,” Mr Gulati said.
Gross Capital Formation, a proxy for economic activity, decreased marginally from 36.2 per cent of GDP in 2013-14 to 35.9 per cent in 2014-15.
“At constant (2011-12) prices, the private final consumption expenditure [a measure of individual spending capacity and inclination] is estimated as Rs. 55.20 lakh crore and Rs. 58.64 lakh crore, respectively for the years 2013-14 and 2014-15. The corresponding rates of PFCE to GDP for the years 2013-14 and 2014-15 are 56.1 per cent and 55.6 per cent respectively,” according to the ministry statement.

Source : The Hindu 

Cattle festival begins

The event began with a cow puja and an agriculture exhibition.
Cattle and livestock belonging to various breeds from all over South India are participating in the festival and also in competitions in various categories.
An exhibition of products and services related to agriculture and livestock will also be conducted. Bulls and cows, including the indigenous breeds such as Kangeyam, Ongole, Tharparker and Gir are on display at the exhibition. Cattle, horses and rams featured in the competitions. This year, a competition for roosters is also being held.

Source : The hindu 

வயிற்று புண்ணை போக்கும் பூசணி

Pumpkin, cantaloupe , parankikkay , sugar pumpkin tamilile this is referred to by many different names . This piece of liana species on the surface of the ground

பரங்கி பூசணி, பரங்கிக்காய், சர்க்கரை பூசணி என்று பல்வேறு பெயர்களில் இதை தமிழிலே குறிப்பிடுவார்கள். தரையில் படரும் கொடி வகையைச் சேர்ந்த இந்த காய் மேற்புறத்தில் அடர்த்தியான பச்சை நிற தோலையும், உள்புறத்தில் அதிக சதைப்பற்றையும், நிறைய விதைகளையும் கொண்டதாக விளங்குகிறது. இதன் தோல், சதைப்பகுதி, விதைகள் ஆகியவையும் மருந்தாக விளங்குகின்றன.  மேலும் இதன் இலைகளும் நல்ல ஊட்டசத்து மிக்க உணவாக பயன் தரக் கூடியதாகும். 

சீனா போன்ற நாடுகளில் பூசணிக்காயை சூப் ஆக வைத்து உணவுக்கு முன்பாக பருகும் வழக்கம் உள்ளது. இதில் வைட்டமின் ஏ மற்றும் ஈ அதிகமாக உள்ளது. 100 கிராம் இலையில் 34 மிலி கிராம் அளவுக்கு கால்சியம், 39 மிலி கிராம் மெக்னீசியம், 4மிலி கிராம் இரும்பு சத்து நிறைந்து காணப்படுகிறது. இவ்வாறு உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாது உப்புகள், மினரல்கள் நிறைந்து காணப்படுவதால் பூசணிக்காய் உடலுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிப்பதாக உள்ளது. 

பரங்கிக்காயின் சதைப்பகுதியை பயன்படுத்தி உடலுக்கு தேவையான மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் பரங்கிக்காயின் தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சதைப்பகுதியை மட்டும் வெட்டி எடுத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பனங்கற்கண்டு, சீரகம், நெய். வேக வைத்த பரங்கிகாய் சதைப்பகுதியை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் அளவுக்கு பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். 

அரை ஸ்பூன் அளவு சீரகம் சேர்க்க வேண்டும். சிறிதளவு நெய் சேர்க்க வேண்டும். இதனுடன் ஒரு டம்ளர் அளவு நீர் விட்டு தேநீர் தயார் செய்து கொள்ள வேண்டும். இதை நன்றாக கொதிக்க செய்து வடிகட்டி பயன்படுத்த வேண்டும். இந்த தேநீர் வெயில் காலத்தில் உடலில் ஏற்படக் கூடிய வெப்பத்தை தணிக்கக் கூடிய ஒன்றாகும். அதே போல அதிகளவு மருந்துகளை உட்கொள்வதால் வயிற்றில் ஏற்படும் புண்களை ஆற்றக் கூடியதாகவும் பூசணி தேநீர் பயன் தருகிறது. 

வெயில் கால அழற்சி என்று சொல்லப்படும் உடல் நோயை குணப்படுத்தும் தன்மை உடையதாக இந்த பூசணி பயன் தருகிறது.  பொதுவாக கோடை காலத்தில் வெப்பத்தால் ஏற்படும் எரிச்சல், சிறுநீரக கோளாறு, வயிற்று கோளாறு, வயிற்று வலி ஆகியவற்றை போக்கும் மருந்தாக பூசணியின் சதைப்பகுதி வேலை செய்கிறது. உடலுக்கு குளிர்ச்சியை தருவதாக, உடலில் இருக்கும் நுண் கிருமிகளை தடுக்கக் கூடியதாக இது விளங்குகிறது.  

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை போக்கு என்ற பிரச்னையை ஏற்படுத்தும் கிருமிகளை இது தடுக்கிறது. பூசணியை பயன்படுத்தி புண்களை ஆற்றக் கூடிய மருந்தை தயார் செய்யலாம். பரங்கிக்காயின் தோல் மற்றும் சதைப்பகுதியை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

இதை நன்றாக மசித்து கொள்ள வேண்டும். இந்த பசையை ஒரு அரைஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு தேன் சேர்க்க வேண்டும். இந்த பசையை சிராய்ப்பு, காயங்கள், புண்கள் ஆகியவற்றிற்கு மேல் பூச்சு மருந்தாக பயன்படுத்தலாம். இவ்வாறு பூசணிக்காய் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருப்பதால் இதை பயன்படுத்தி உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை பெறலாம்

Source : Dinakaran

மூலிகை மந்திரம்: பீர்க்கங்காய்

Will play an important part in our diet to vegetables, the most important place given pirkkankaykkuk. The character is so much to prevent many diseases

நம்முடைய உணவில் முக்கியமான அங்கம் வகிக்கும் காய்கறி வகைகளில், மிக முக்கியமான இடத்தை பீர்க்கங்காய்க்குக்  கொடுக்கலாம். அந்த அளவுக்குப் பல நோய்கள் வராமல் தடுக்கும் குணம் கொண்டது என்பதுடன் வந்த நோயை விரட்டும்  திறனும் கொண்டது பீர்க்கங்காய்.  மித வெப்பமான சீதோஷ்ண நிலையில் வளரக்கூடிய ஒரு கொடி வகைத் தாவரம் பீர்க்கங்காய்  ஆகும். ஆசியா, ஆப்பிரிக்கா பகுதிகளில் பெரும்பாலும் பயிரிடப்பட்டு உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. உணவுக்காக மட்டுமின்றி  நாருக்காகவும் பல நாடுகளில் பயிரிடப்படுகிறது.

பீர்க்கங்காயின் தாவரவியல் பெயர் Luffa acutangula என்பது ஆகும். Ribbed gourd என்று ஆங்கிலத்தில்  அழைக்கப்படுகிறது. கடு கோஷ்டகி, திக்த கோஷ்டகி என்பவை இதன் வடமொழிப் பெயர்கள். இந்தி மொழியில் பீர்க்கங்காயை  ஷிரேபல்லி, ஜிங்கதோரீ, தோனா என்கிற பெயர்களால் குறிப்பர்.

பீர்க்கங்காயில் பொதிந்துள்ள மருத்துவப் பொருட்கள் 


100 கிராம் எடையுள்ள பீர்க்கங்காயில் சுண்ணாம்புச்சத்து 18 மி.கி. அளவும், மாவுச்சத்து 3 கிராம் அளவும், எரிசக்தி 17  கலோரியும், பாஸ்பரஸ் 26 மி.கி. அளவும் உள்ளது. வைட்டமின் பி2, வைட்டமின் சி, கரோட்டீன், நியாசின், இரும்புச்சத்து,  அயோடின் மற்றும் ஃபுளோரின் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகப் பீர்க்கங்காய் விளங்குகிறது.

பீர்க்கங்காய் இனிப்புச் சுவையுடையது என்பது மட்டுமின்றி எளிதில் ஜீரணமாகக் கூடியதாகவும் விளங்குகிறது. உடலுக்குக்  குளிர்ச்சி தரும் பீர்க்கங்காய், மிகக் குறைந்த அளவேயான கொழுப்புச் சத்தைக் கொண்டிருக்கிறது. இதனால், உடல் எடையைக்  குறைக்க விரும்புவோர்க்கு நல்ல உணவாக அமைகிறது. இதில் மிகுந்த நீர்ச்சத்து இருப்பதும் எடை குறைவதற்கு முக்கிய  காரணமாக அமைகிறது. 

பீர்க்கங்காயின் சாறு மஞ்சள் காமாலை நோய்க்கும் அருமருந்தாக உதவுகிறது. பீர்க்கங்காயை அரைத்துப் பெறப்பட்ட சாறு அல்லது காய்ந்த பீர்க்கங்காயின் விதை மற்றும் சதைப்பகுதியின் சூரணம் மஞ்சள் காமாலை நோயை மறையச் செய்யும்  இயற்கை மருந்து என்றால் மிகையில்லை.பீர்க்கங்காயில் ரத்தத்தைச் சுத்தப்படுத்தக்கூடிய வேதிப் பொருட்களும் மிகுந்துள்ளன.  குறிப்பாக, மது அருந்துகிறவர்களுக்கு மதுவினால் ஏற்படும் நச்சுக்களை ரத்தத்தில் இருந்து அகற்ற பீர்க்கங்காய் உதவும். ரத்தம்  சுத்தமாவதோடு கெட்டுப் போன ஈரலைச் சீர் செய்து மீண்டும் புத்துணர்வோடு செயல்படவும் பீர்க்கங்காய் கை கொடுக்கிறது. 

குறைந்த அளவு எரிசக்தி கொண்ட உணவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக விளங்குகிறது.  பீர்க்கங்காயில் இருக்கும் பெப்டைட்ஸ், ஆல்கலாப்ட்ஸ், சோன்டின் போன்ற வேதிப்பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை  அளவைக் குறைக்க உதவுகின்றன. பீர்க்கங்காயில் உள்ள அதிகமான நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்குவதற்கு உதவுகிறது. அது  மட்டுமின்றி மூல நோய்க்கும் முக்கிய மருந்தாக பீர்க்கங்காய் விளங்குகிறது. 

பீர்க்கங்காய் முற்றி காய்ந்த நிலையில் கூடு போன்ற நார்ப்பகுதியைப் பெற்றிருக்கும். இந்த நார் கொண்டு உடலைத் தேய்த்துக்  குளிப்பதால் தோல் ஆரோக்கியத்தையும், பளபளப்பான தன்மையையும் பெறும். தோலின் மேலுள்ள பருக்கள் விரைவில்  குணமாகவும் உதவி செய்கிறது. உடலின் துர்நாற்றத்தைப் போக்கவல்ல மருத்துவ குணத்தையும் பீர்க்கங்காயின் 
நார் பெற்றிருக்கிறது. 

ஹோமியோபதி மருத்துவத்தில் பீர்க்கங்காயின் சாறு கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும்  மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. உணவுப்பாதையின் உட்புறப் பகுதிகளில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தைப் போக்குவதற்கும் பீர்க்கங்காய் சாறு பயன்படுத்தப்படுகிறது. மத்திய சித்த ஆயுர்வேத ஆய்வுக்கழகம் பீர்க்கங்காயின் இலை, காய், வேர்  போன்றவற்றில் இருந்து பெறப்படும் சாற்றை தினமும் 20 மி.லி. வரையில் ஒரு வேளைக்கான மருந்தாக உட்கொள்வது  பலவிதங்களிலும் நல்லது என பரிந்துரை செய்திருக்கிறது. பீர்க்கங்காயை நன்கு உலர்த்திப் பொடித்து நன்கு சலித்து வைத்துக்  கொண்டு மூக்குப்பொடி போல மூக்கிலிட்டு உறிஞ்சுவதால் மஞ்சள் காமாலை நோய் மறையும் எனவும் ஆயுர்வேதம்  குறிப்பிடுகிறது.

பீர்க்கங்காய் மருந்தாகும் விதம் 

ஒரு கப் பீர்க்கங்காய் சாறு எடுத்து அதனோடு இனிப்புச் சுவைக்காக வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து கலக்கி காலை, மாலை  என இரண்டு வேளையும் உணவுக்கு முன் பருகி வருவதால் மஞ்சள் காமாலை நோய் மறைந்து போகும்.

பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்றாக நசுக்கி காயங்களின் மேல் பற்றாகப் போட்டுக் கட்டி வைப்பதால் ரத்தக் கசிவு நீங்கி  காயம் ஆறும். 

பீர்க்கங்காயைத் துண்டுகளாக்கி இரண்டு டம்ளர் நீர் விட்டு அடுப்பேற்றி நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அதனோடு  சுவைக்காகப் போதிய உப்பு சேர்த்து, காலை, மாலை என இரு வேளை பருகி வருவதால் வயிற்றினுள் துன்பம் தருகிற வயிற்றுப்  பூச்சிகள் வெளித்தள்ளப்பட்டு வயிறு சுத்தமாகும். 

பீர்க்கங்காய் சாறு எடுத்து அரைடம்ளர் சாறுடன் போதிய இனிப்பு சேர்த்து தினமும் இருவேளை குடித்து வருவதால் ஆஸ்துமா  எனும் மூச்சு முட்டுதல் குணமாகும்.

பீர்க்கங்காயின் இலைகளை மைய அரைத்து அதனோடு பூண்டை நசுக்கிச் சாறு எடுத்து சேர்த்துத் பூசி வந்தால் தொழுநோய்ப் புண்கள் விரைவில் ஆறும்.

பீர்க்கங்காயைச் சிறுசிறு துண்டுகளாக்கி வெயிலில் நன்றாக உலர்த்திக் கொள்ள வேண்டும். பிறகு, இடித்துப் பொடி செய்து  வைத்துக்கொண்டு இரவு சாதம் வடித்த கஞ்சியை வைத்திருந்து காலையில் அதனோடு பீர்க்கங்காய் பொடியைக் கலந்து  தலைமுடிக்குத் தேய்த்து 20 நிமிடங்களுக்குப் பிறகு குளித்து வருவதால் இளநரை தடை செய்யப்படுவதோடு, தலைமுடி  மென்மையாகவும் பளபளப்பாகவும் விளங்கும்.

பீர்க்கங்காய்க் கொடியின் வேர்ப்பகுதியைச் சேகரித்து நன்கு உலர்த்திப் பொடித்து வைத்துக்கொண்டு தினம் இருவேளை சிறிதளவு  உண்டு வர நாளடைவில் சிறுநீரகக் கற்கள் வெளியேறும்.

பீர்க்கங்கொடியின் இலைகளை எடுத்து நன்றாக நீர் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து சாப்பிட்டு வருவதால் சீதபேதி  குணமாகும். வயிற்றுக் கடுப்பும் தணியும்.

பீர்க்கங்கொடியின் இலையைக் கசக்கிப்பிழிந்து சாறு எடுத்து நாள்பட்ட ஆறாத புண்களைக் கழுவுவதாலோ அல்லது மேற்பூச்சாகப்  பூசி விடுவதாலோ விரைவில் புண்கள் ஆறி விடும்.

பீர்க்கங்காய்க் கொடியின் வேர்ப்பகுதியை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து மேற்பூச்சாகப் பயன்படுத்துவதால் வீக்கமும் வலியும்  குறைந்து நெறிக்கட்டிகள் குணமாகும்.

பீர்க்கங்காய் சாறு எடுத்து உடன் இனிப்பு சேர்த்து வெறும் வயிற்றில் சில நாட்கள் குடித்து வருவதால் பித்தத்தால் வந்த  காய்ச்சல் தணிந்து போகும். 

பீர்க்கங்காய் சாறு அரை டம்ளர் அளவு அன்றாடம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வருவதால் அதிலுள்ள பீட்டா  கரோட்டீன் சத்து கிடைக்கப்பெற்று கண் பார்வை தெளிவு பெறும். கண்களுக்கு ஆரோக்கியம் மேலோங்கும். வாய்ப்பு  கிடைக்கும்போதெல்லாம் பீர்க்கங்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக்  கொள்ள  முடியும்.  எளிதில் கிடைக்கிற, இத்தனை நன்மைகள் நிறைந்த பீர்க்கங்காயை இனியேனும் பயன்படுத்திக் கொள்வோம்தானே?!

Source : Dinakaran

குறைந்த செலவில் செழித்து வளரும் நெல்லி மகசூலை தருகிறது அள்ளி

சிவகங்கை சுற்றுப்பபகுதி கிராமங்களில் செழித்து வளரும் நெல்லியால் விவசாயிகள் குறைந்த செலவில் வருவாய் ஈட்டி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் செம்மண் சார்ந்த பகுதியாக உள்ளது. ஆண்டுதோறும் சீரான மழை பெய்யாததால் இப்பகுதியில் விவசாயம் செய்வது குறைந்து விட்டது. இந்நிலையில் குறைந்த அளவிலான பராமரிப்புச்செலவு மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலம் வருவாய் ஈட்டும் விவசாயத்தை பல வெளிமாவட்ட விவசாயிகளும், நிறுவனங்களும் இப்பகுதியில் செய்து வருகின்றனர். 

இதில் நெல்லி உற்பத்தி முதலிடம் வகிக்கிறது. தற்போது பல்வேறு மருந்துகள் செய்வதற்கும், நகர்பகுதிகளில் விற்பனை செய்வதற்கும் நெல்லிக்காய் பயன்பட்டுவருகிறது. சிவகங்கை அருகே கவுரிப்பட்டி, மதகுபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல்லிக்காய் விளைவிக்கப்படுகிறது. நெல்லிக்காய்களுக்கு எல்லா காலங்களிலும் கடும் கிராக்கி நிலவி வருகிறது. 
இதில் பவானிசாகர், கிருஷ்ணா, காஞ்சன், என்ஏ7, என்ஏ10 என பல்வேறு வகையான காய்கள் உள்ளது. 15 அடிக்கு ஒரு நெல்லிச்செடி நடப்படுகிறது. 

இந்த நிலங்களில் மரங்கள் வளர்ந்த பின்னரும் ஊடு பயிராக தட்டைப்பயிர், தர்பூசணி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை விவசாயம் செய்துகொள்ளலாம். மேலும் சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சசுவதால் நீருக்கான செலவும், நீர் வீணாவதும் தடுக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளில் இருந்து காய்க்கத்தொடங்கும் நெல்லி சுமார் 60ஆண்டுகள் வரை காய்க்கும். 

இது குறித்து நெல்லி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர் கூறியதாவது: வருடத்திற்கு ஒரு முறை மற்றும் இரண்டு முறை காய்க்கும் மரங்கள் உள்ளன. ஒரு மரம் வருடத்திற்கு 50 கிலோ முதல் 150 கிலோ வரை காய்க்கும் திறன் கொண்டதாகும். இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். நெல்லிக்கான பராமரிப்பு செலவு மிகவும் குறைவு. மேலும் நோய் தாக்குதல் போன்ற பிரச்னை இல்லை.உடனடியாக பறிக்கப்படும் காய்கள் மட்டுமல்லாது கீழே விழுந்து பலநாள்கள் ஆகி காய்ந்து போன நிலையில் உள்ள காய்களும் வீணாகாது. இங்கிருந்து கேரளா போன்ற மாநிலங்களுக்கு மருந்துகளுக்காகவே அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றனர்.

Source : Dinakaran

நாகையில் இன்று கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

நாகை வெளிப்பாளையம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மாவட்ட ஆத்மா திட்டத்தின்கீழ், இன்று (29ம் தேதி) காலை 9 மணி அளவில் கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. கறவை மாடு வளர்ப்பின் இன்றைய நிலை, தரமான கறவை மாடுகளை தேர்வு செய்தல், கொட்டகை அமைக்கும் முறை, கறவை மாடு வளர்ப்பிற்கான சமச்சீர் தீவன மேலாண்மை, கறவை மாடு கன்று, கிடேரி பராமரிப்பு, கறவை மாடுகளில் கருவூட்டல் மற்றும் சினைப்பருவ மேலாண்மை, கறவை மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள், தடுப்பு முறைகள்போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும். முதலில் வரும் 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இத்தகவலை கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர்  சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Source : Dinakaran

Thursday, January 28, 2016

IMD to issue block-level forecasts soon


Through this farmers could be warned, three to five days ahead, of potentially anomalous weather in their localities. File Photo



Met department initiative to warn farmers about anomalous weather

The India Meteorological Department (IMD) will begin to issue weather forecasts at the block level later this year, Laxman Rathore, Director General, IMD, toldThe Hindu.
Through this farmers could be warned, three to five days ahead, of potentially anomalous weather in their localities that could threaten their crops. The IMD currently issues such short-term forecasts in 100 districts across States and so-called agro-climatic zones. These are contiguous districts that are known to have similar weather conditions.
On an average, 8-10 blocks make up each of India’s 688 districts but often the weather can vary quite significantly within a district, to the extent, that farmers need different types of forecast even if say 40 km apart.
“The skill of our [weather] models for block-level forecasts needs to improve but we expect it to be able to give usable forecasts by next financial year,” Mr. Rathore said. The skill of a model refers to how accurately it predicts the weather.
“At the agro-climate zone level, the models have a skill of 80% but at the block levels it hovers around 60%,” he said.
The IMD generally relied on a bank of statistical data, collected over two centuries, to prepare its weather forecast. However with complaints and concerns over its accuracy — such as in predicting droughts — it has started to rely on so-called numerical weather models.
These rely on the processing power of super-computers but, according to those who work with them, they are yet to become reliable enough to consistently simulate monsoon and Indian climate conditions. “We still have to go a long way in improving the models at the district level,” said Madhavan Rajeevan, Secretary, Ministry of Earth Sciences. The IMD reports to this Ministry.
Mr. Rathore, however, clarified that the IMD would be employing ensemble models for their forecasts, a kind of a halfway house between statistical and dynamic techniques.
The IMD’s initiative comes even as a study by the National Council for Applied and Economic Research (NCAER) found that India has posted an improved agriculture-performance in rain-fed farming with a sizeable number of farmers attributing a 25% rise in their net income to improved meteorological advisory services.
On the other hand, the report notes that nearly 75% of Indian farmers lacked reliable access to these services.
India saw consecutive droughts in 2014 and 2015, a rare event said to be at least partly due to climate change. This in turn is said to induce changes in the monsoon that also makes local weather even more unpredictable.