வேளாண்மை துறை மூலம் நெல் நடவு இயந்திரம், தானியங்கள் கதிரடிக்கும் கருவி உள்ளிட்ட வேளாண் கருவிகளை மானிய விலையில் பெறுவதற்கு, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எம்.லட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம், 2015-2016ஆம் ஆண்டு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் வேளாண்மை இயந்திர மயமாக்கலுக்கான துணை இயக்கம் சார்பில், விவசாயிகளுக்கு நெல் நடவு இயந்திரம், தானியங்கள் கதிரடிக்கும் கருவிகள், நேரடி விதைப்பு கருவி, மற்றும் இதர வேளாண் கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
இதற்காக ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள், சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் பொதுப் பிரிவினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண் கோட்டத்துக்கு உள்பட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகலாம்.
தொடர்புக்கு: விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுôர் பகுதி விவசாயிகள், உதவி செயற் பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, வழுதரெட்டி விழுப்புரம் அலுவலகத்திலும், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி பகுதி விவசாயிகள் திண்டிவனம் ஜெயபுரம் காலனி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் பகுதி விவசாயிகள், கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பள்ளிக்கூட வீதி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் பகுதி விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் திருக்கோவிலூரிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
Source : Dinamani
No comments:
Post a Comment