மஞ்சள் சாகுபடி: நோயற்ற மஞ்சள் கிழங்குகளை விதைக்காக தெரிவு செய்ய வேண்டும். களை நீக்கம், மண் அணைத்தல், மூடாக்கு போன்றவை தேவைக்கு ஏற்ப செய்ய வேண்டும். தண்ணீர் தேங்காமல் இருக்க வடிகால் ஏற்படுத்த வேண்டும். கிழங்கழுகல் நோயைக் கட்டுப்படுத்த 0.3 சதம் டைத்தேன் எம்.45 பூஞ்சாணத்தை செடியைச் சுற்றி ஊற்றி நனைக்க வேண்டும். இலைப்புள்ளி நோய் தாக்குதல் தென்பட்டால் போர்டோ கலவை 1 சதம் அல்லது டைத்தேன் எம்.45 0.2 சதம் (200 கிராம் / 100 லிட்டர் தண்ணீர்) கரைசலை தெளிக்க வேண்டும்.
கொத்தமல்லி சாகுபடி: செடிகளை களைக்க வேண்டும். 5-10 செ.மீ இடைவெளியில் முதல் களை நீக்கம் விதைத்து 15 நாட்களில் செய்ய வேண்டும். களை நீக்கம் மற்றும் செடிகள் களைப்பு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். இரண்டாம் முறையாக நீர்ப்பாசனம் 25-25 நாட்களில் செய்ய வேண்டும். மேலுரமாக எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்து உரம் இட வேண்டும்.
மிளகாய் சாகுபடி: டைபேக் மற்றும் பழஅழுகல் நோயைக் கட்டுப் படுத்த சிஓசி (COC) 3 கிராம் / லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். பழ போரரை கட்டுப்படுத்த என்.பி.வி.ஐ. 200 L.E / ஏக்கர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். இரண்டாவது மேலுரமாக எக்டருக்கு தழைச்சத்து 50 கிலோ மற்றும் சாம்பல் சத்து 20 கிலோ என்ற அளவில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். கரிசல் நிலம் சாகுபடியாக இருந்தால் 20-25 நாட்களுக்கு ஒருமுறையும், செவ்வக நிலமாக இருந்தால் 10-15 நாட்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
Source : Dinamalar
No comments:
Post a Comment