உடல் வளர்ச்சி அதிகமாக காணும் குழந்தை பருவத்திலும், விடலை பருவத்திலும், பெண்கள் கருவுரும் காலங்களிலும் ரத்த சோகை பரவலாக காணப்படும் ஒரு குறைபாடு. ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலோ அல்லது ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைத் தரக் கூடிய ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தாலோ ரத்த சோகை ஏற்படும். ரத்த சோகையில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக புரோட்டீன், இரும்புச் சத்து வைட்டமின், B12,folic அமிலம் போன்ற சத்துக்கள் உடம்பில் குறைவதனால் ஏற்படக்கூடிய ரத்த சோகையை Nutritional Anemia என்று அழைக்கின்றோம்.
வளரும் பருவத்தில் உடல் வளர்ச்சிக்கு இரும்புச் சத்து அதிகம் தேவைப்படுகிறது. இன்றைய டீன் ஏஜ் குழந்தைகள் உணவின் முக்கியத்துவமும் உடலுக்கு தேவையான சத்துக்கள் என்னவென்று அறிந்து போதுமான அளவு சாப்பிடாமல் அளவையும் தரத்தையும் குறைத்து சாப்பிடுகிறார்கள். சத்தான உணவை முறையான வேளையில் உட்கொள்ளாமல் நொறுக்குத் தீனிகளை பெரும்பாலும் உட்கொள்கிறார்கள். மதிய உணவை பெரும்பாலும், பள்ளியிலோ, கல்லூரியிலோ கழிப்பதால் கேண்டீனில் பிஸ்கட், சிப்ஸ், சமோசா, கோக் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். காலை வேளையில் ஸ்டைலாக இரண்டு பிஸ்கட்டை டீயுடனோ, காபியுடனோ சாப்பிட்டுவிட்டு வெளியில் கிளம்புகிறார்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே அடிக்கடி ஏற்படும் தொற்று நோய்களும் ரத்தச் சோகைக்கும் ஒரு காரணம் இரும்புச் சத்து பற்றாக் குறையினால் ஏற்படும் அறிகுறிகளை நாம் முதலில் கண்காணிக்க வேண்டும். மூச்சு திணறல், நோய் எதிர்ப்புத் தன்மை குறைதல், களைப்பாக இருப்பது போல் காணப்படுதல், தலைசுற்றல், அஜீரணக் கோளாறுகள் போன்றவை ஏற்படதால் அது ரத்த சோகையின் அறிகுறிகளாகும். ரத்த சோகையை மருந்துகளில் மூலமாக குணப்படுத்த முடியும். இதைத் தவிர உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரும்புச் சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை மட்டும் சேர்த்துக் கொள்வதால் ரத்த சோகையை குணப்படுத்த முடியாது.
போதுமான மாவுச்சத்து, மற்றும் புரதச் சத்துடன், காய்கறி பழவகைகளும் அவசியம் உட்கொள்ள வேண்டும். அத்துடன் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு டம்ளர் பாலாவது குடிப்பது மிக அவசியம்.
உணவுடன் வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களையும், பழச்சாறுகளையும் உட்கொள்ள வேண்டும். வைட்டமின் சி இரும்புச் சத்தை முழுமையாக உடலில் சேர்க்கிறது.
உனவுடன் டீ, காபி குடிக்கக் கூடாது. அப்படி குடித்தால் இரும்புச் சத்து உடலில் சேராமல் போய்விடும். பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் குறிப்பாக கொத்துமல்லி, புதினா, அரைக்கீரை, முருங்கை கீரை, சுண்டைக்காய் ஆகியன இரும்புச் சத்து நிறைந்து காணப்படுகிறது. முட்டையில் உள்ள மஞ்சள் கரு முழு தானிய வகைகள் ஈரல் போன்ற இறைச்சி வகைகள் உடம்பிற்கு இரும்பு மற்றும் ஃபாலிக் சத்தை அளிக்கிறது.
நொறுக்குத் தீனிகள் என்ற பெயரில் பிஸ்கட், பஃப், ப்ரெட் என்று வாங்கி குழந்தைகளுக்குக் கொடுக்காமல் வேர்க்கடலை உருண்டை, வெல்லப்பாயசம், அவல், பொரி உருண்டை, உளுந்து லட்டு என்று நாம் வீட்டிலேயே சிற்றுண்டிகளை தயாரித்து பசிக்கும் நேரத்தில் உட்கொள்ளலாம்.
முளைகட்டிய பயறுவகைகள் வைட்டமின் சியை அதிகரித்து நல்ல புரதத்தை அளிக்கிறது. முளைகட்டிய பயறுவகைகளை லேசாக ஆவி பிடித்துதான் உண்ண வேண்டும். பச்சையாக சாப்பிடக் கூடாது.
ரத்தசோகை தாக்கியவர்கள் முதல் முதலில் வயிற்றில் பூச்சி இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பரிசோதித்த பிறகு அதற்கு டாக்டரிடம் சரியான ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொண்ட பிறகு தான் மருந்தும், உனவு முறைகளும் பலன் அளிக்கும்.
Source : Dinamani
No comments:
Post a Comment