Wednesday, December 16, 2015

75 சதவீத மானிய விலையில் தீவன விற்பனை தொடக்கம்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு நளநாராயாணப்பெருமாள் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, புதுச்சேரி உயர்கல்வி அமைச்சர் சிவா தலைமை வகித்தார். திருநள்ளாறு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் தாமரைச்செல்வன், காரைக்கால் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய மேலாண் இயக்குனர் குமாரசாமி, மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி ரேவதி கலந்து கொண்டனர்.

இதில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு, 75% மானிய விலையிலான தீவனத்தை, அமைச்சர் சிவா வழங்கி துவங்கி வைத்தார். மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தொகுதி மக்களுக்கு இலவச கழிவறைகள் கட்ட சுமார் 100 குடும்பங்களுக்கு தலா ரூ.7 ஆயிரத்திற்கான பணி ஆணையையும் அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில், என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் சிவகுமார், மகாலிங்கம், அய்யாடி, திருநள்ளாறு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க எழுத்தர் பாண்டியன், இயக்குனர்கள் ரவிச்சந்திரன், விஷ்ணுவரதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Source : Dinakaran

No comments:

Post a Comment