கரூர் கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவ சங்கம் சார்பில், கடலூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு, மாட்டு தீவனங்கள் இரண்டு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. கரூர் கலெக்டர் ஜெயந்தி கூறியதாவது: இங்கு, 2.16 லட்சம் ரூபாய் மதிப்பில், 12 டன் அடர் மாட்டுத்தீவனங்களை அதிகளவில் கால்நடைகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கொடையாளர்கள் தீவனங்கள் அளிக்க முன்வர வேண்டும். வழங்க முன்வருவோர், 9578781181 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
Source : Dinamalar
Source : Dinamalar
No comments:
Post a Comment