Monday, February 15, 2016

சாலைவேம்புவில் புதிய கால்நடை கிளை மருத்துவமனை திறப்பு


காரமடையை அடுத்த கெம்மாரம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சாலைவேம்பு கிராமத்தில் ரூ.2.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கால்நடை கிளை மருத்துவமனை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல சிறப்பு மருத்துவர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். காரமடை ஒன்றியக் குழுத் தலைவர் ராஜ்குமார், கோவை ஆவின் நிறுவன இயக்குநர் பி.டி.கந்தசாமி, மாநில வேளாண் குழு உறுப்பினர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி இயக்குநர் பழனிசாமி வரவேற்றார்.
இதில், மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், எம்எல்ஏ ஓ.கே. சின்னராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடை கிளை மருத்துவமனையைத் திறந்து வைத்தனர்.
இதில், கால்நடை மருத்துவர்கள் வேணுகோபால், சுலோசனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி துணைத் தலைவர் பொன்னுசாமி நன்றி கூறினார்.

Source : Dinamani

No comments:

Post a Comment