Monday, February 15, 2016

கோவையில் பயிற்சி பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ்

 கோவை தமிழ்நாடு வேளான்மை பல்கலைக்கழகத்தில் ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்மைத்துறையில் செயல்படுத்தபட்டு வரும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு (அட்மா) திட்டத்தின்கீழ் மானாவாரி சாகுபடியில் மக்காச்சோளம் உற்பத்தி தொழில்நுட்பம் பற்றிய மாநில அளவிலான பயிற்சி 3 நாட்கள் நடந்தது. பயிற்சியில் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த 40 விவசாயிகள் பங்கேற்ற விவசாயிகளுக்கு ஜெயங்கொண்டம் வேளாண்மை உதவி இயக்குனர் இளங்கோவன் சான்றிதழ் வழங்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Source : Dinakaran

No comments:

Post a Comment