புதுச்சேரியில் இயற்கை முறை விவசாயம் குறித்து குருமாம்பேட் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வேளாண் கல்லூரி மாணவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக புதுச்சேரிக்கு களப்பயிற்சிக்காக வருகின்றனர். அதேபோல், இந்த ஆண்டு இந்திய வேளாண்மை குறித்த பயிற்சியினை பெறுவதற்காக 28 மாணவர்கள் புதுச்சேரி வந்துள்ளனர். குருமாம்பேட்டில் இயங்கும் மத்திய அரசின் காமராஜர் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் இந்திய விவசாயம் குறித்து கலந்துரையாடல், செயல்விளக்கப் பயிற்சி, கிராமங்களில் தங்கி களப்பணிகளில் ஈடுபடுதல் போன்றவற்றை ஒருமாத காலத்துக்கு அவர்கள் மேற்கொள்கின்றனர் என்று அறிவியல் நிலைய முதல்வர் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், இயற்கை முறையிலான விவசாயத்தின் மீது பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக உதவிப் பேராசிரியர் பார்த்தசாரதி கூறினார்.
Source : Dinamani
No comments:
Post a Comment