பனியால் பாதிக்கும் பணப்பயிர்
உலகின் முக்கிய வர்த்தகப் பயிரான தேயிலை பருவநிலை மாற்றத்தினால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. சென்ற ஆண்டில் மட்டும் பருவநிலை மாற்றத்தினால் தேயிலை உற்பத்தியில் 16 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. தேயிலைச் செடிகளில் பனி விழுவதால் கென்யாவில் தேயிலை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. உலகில் தேயிலை உற்பத்தியில் மூன்றாவது நாடாக கென்யா உள்ளது. தேயிலைச் செடிகளுக்குள் மரங்களை நட்டு பனியை குறைக்கின்றனர். இதன் மூலம் தேயிலை மீது பனி விழுவதற்கு பதிலாக மரங்களின் மீது விழுகிறது. கென்யா நாட்டு தேயிலை விவசாயிகள் தற்போது நாட்டுக்காக இல்லாவிட்டாலும் தேயிலைக்காவது மரங்களை நடுகின்றனர்.
தகவல் சுரங்கம்
மாசி பழமொழிகள்
'தைப்பனி தரையைத் துளைக்கும்; மாசிப்பனி மச்சைத் துளைக்கும்' என்னும் பழமொழி வெயில் தொடங்கினாலும் மாசியிலும் குளிர் இருக்கும், பனி பெய்யும் என்பதை குறிக்கிறது. 'மாசிப் பூணுால் பாசி படரும்' என்ற பழமொழி மாசியில் உபநயனம் செய்யும் ஒருவர் பூணுாலில் பாசி படரும் அளவுக்கு அதிகளவில் 'காயத்ரி ஜெபம்' செய்வார் என்பதைக் காட்டுகிறது. தையில் அறுவடை முடிந்தபின் வீட்டு விசேஷங்களைப் பெரும்பாலும் மாசியில் தான் வைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. மாசியில் தான் பெரும்பாலும் திருமணங்கள் நடைபெற்றன.
Source : Dinamalar

No comments:
Post a Comment