Tuesday, February 2, 2016

ஊட்டி மத்திய மண்– நீர்வள ஆராய்ச்சி மையத்தில் கேரளா, ராஜஸ்தான் மாநில உதவி வன பாதுகாவலர்களுக்கு பயிற்சி



ஊட்டி,
ஊட்டியில் உள்ள மத்திய மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி மையத்தில் கேரளா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த உதவி வன பாதுகாவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நேற்று தொடங்கியது.
கேரளா, ராஜஸ்தான்ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையம் சார்பில் கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 34 உதவி வன பாதுகாவலர்களுக்கு வனப்பகுதிகளில் நீர் பிடிப்பு மேலண்மை பயிற்சி 12 நாட்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சி மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தில் நேற்று நடைபெற்றது.
இதற்கு ஆராய்ச்சி மைய தலைவர் கோலா தலைமை தாங்கினார். மாவட்ட வன அதிகாரி பத்ரசாமி, வனக்கல்லூரி பேராசிரியர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பயிற்சி முகாமை முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் சீனிவாச ரெட்டி தொடங்கி வைத்து பேசியதாவது:–
உயிரினங்கள்நீலகிரி மாவட்டம் வனத்துறை அதிகாரிகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கும் மையமாக திகழ்கிறது. இங்கு பல்வேறு வகையான தாவரங்கள், உயிரினங்கள், நீர்நிலைகள் உள்ளிட்டவை உள்ளன. இங்குள்ள மத்திய அரசின் மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையம் நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும் சேர்ந்த பல்வேறு அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கி வருகிறது.
இங்கு அளிக்கப்படும் பயிற்சி மூலம் வனத்துறையினர் வனங்களை பாதுகாத்தல், மண் மற்றும் நீர்நிலைகளை அறிந்து கொள்ளுதல், நீர்நிலைகளை மாசுபடாமல் பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து எளிதாக அறிந்து கொள்ளமுடியும். இதன் மூலம் உதவி வன பாதுகாவலர்கள் வனங்களை பாதுகாக்க முடியும்.
மண் அரிப்புஇங்கு பயிற்சி எடுக்கும் அதிகாரிகள், பணியில் சேர்ந்த பின்பு தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகள் மற்றும் வனத்துறை ஊழியர்களுக்கு வனத்தை பாதுகாப்பது, மண் வளம் மற்றும் மண் அரிப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பயிற்சி முகாமில் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டாக்டர் மணிவண்ணன், மழைநீர் சேகரிப்பு, வனப்பகுதியில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு, நீர்நிலைகளை பாதுகாக்க திட்ட மதிப்பீடு தயார் செய்வது குறித்து பயிற்சி அளித்தார். இதில் விஞ்ஞானிகள் டாக்டர் கண்ணன், கஸ்தூரி திலகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Source : Dailythanthi

No comments:

Post a Comment