Tuesday, February 2, 2016

நாகர்கோவிலில் இன்று வேளாண் திட்டக் கூட்டம்


தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் மாவட்ட வேளாண்மை திட்டம் தயாரிக்கும் கூட்டம் புதன்கிழமை (பிப். 3) மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியரக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா.சவாண் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, மீன்வளத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, கூட்டுறவுத்துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, மாவட்ட ஊராட்சி, நபார்டு வங்கி, முன்னோடி வங்கி, டான்பெட், ஆவின், ரப்பர் வாரியம், விதைச்சான்றுத்துறை ஆகிய துறைகள் பங்கேற்கின்றன.  மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், தனியார் தொண்டு நிறுவன பிரதிநிதியும் கலந்துகொள்கின்றனர் என்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை)எம்.நிஜாமுதீன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Source : dinamani

No comments:

Post a Comment