Monday, February 1, 2016

உடுமலை பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில் பயிர்க்கடன் புதுப்பித்தல் முகாம்



உடுமலை,
உடுமலையை அடுத்த வாளவாடியில் பாரத ஸ்டேட் வங்கியின் உடுமலை கிளை சார்பில் விவசாய கடன் தீர்வு மற்றும் பயிர்கடன் புதுப்பித்தல் முகாம் நடைபெற்றது. முகாமில் கோவை மண்டல துணைப்பொது மேலாளர் ரமேஷ், கோவை மண்டல உதவி மேலாளர் பிரதீப் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 73 விவசாயிகள் ரூ.84 லட்சத்திற்கான பயிர்கடனை புதுப்பித்தனர். மேலும் 11 விவசாயிகளின் ரூ. 38 லட்சம் கடன் தீர்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து 3 விவசாயிகளுக்கு ரூ.28 லட்சம் மதிப்பில் புதிய டிராக்டர்களுக்கான கடன் வழங்கப்பட்டது. மேலும் வேளாண் விளைபொருள் விற்பனை கடனாக 15 விவசாயிகளுக்கு ரூ.1 கோடி வரை கடன் வழங்கப்பட்டது. இறுதியாக பாரத ஸ்டேட் வங்கி (ஏ.டி.பி. விவசாய பிரிவு) கிளையின் மேலாளர் ரங்கராஜ் நன்றி கூறினார்.

Source : Dailythanthi

No comments:

Post a Comment