திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் சிறுதானியத்தை அதிக அளவில் பயிர் செய்து லாபம் அடையலாம் என்று கலெக்டர் சுந்தரவல்லி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசினார்.
குறை தீர் கூட்டம்திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் சுந்தரவல்லி கூறியதாவது:–
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சிறுதானியத்தை அதிக அளவில் பயிர் செய்து லாபம் பெறலாம். மேலும் சிறுதானிய சாகுபடியில் திருவள்ளூர் மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்ற விவசாயிகள் முன்வர வேண்டும். மாவட்டத்தில் 8 இடங்களில் செயல்பட்டு வரும் இ–சேவை மையங்களுக்கு விவசாயிகள் நேரடியாக சென்று பட்டா, சிட்டா, வருமான சான்று போன்றவற்றை பெற்று பயன்படுத்தி கொள்ளலாம்.
எதிர்வரும் கோடை காலத்திற்கு பயன்படும் வகையில் தர்பூசணி பயிரிட தேவையான விதைகளை வழங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் ஆகிய வசதிகளை செய்திட நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பழுதடைந்த சாலைகள்மழை வெள்ளத்தால் பழுதடைந்த சாலைகளை சீரமைத்திடவும், பூண்டி, பழவேற்காடு நீர்த்தேக்கங்களை சுற்றுலா தலமாக மாற்றவும், ராமஞ்சேரி கிராமத்தில் கரும்பு பயிர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டு தண்ணீர் தேங்கியுள்ளதால் மகசூல் வெகுவாக குறையும் என்பதால் அவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, சப்–கலெக்டர் ராகுல்நாத் மற்றும் அனைத்து அரசுதுறை அலுவலர்கள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.
source : Dailythanthi

No comments:
Post a Comment