Wednesday, December 30, 2015

இந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் பணிகள்; சேவைகள்; மானியங்கள்

400 ஆண்டுகளுக்கு முன் போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து இந்திய கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு பயிரிடப்பட்ட முந்திரி இன்று 7 லட்சம் எக்டேரில் பயிரிடப் படுகிறது. முந்திரி வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு விளையும் முந்திரியையும் பதப்படுத்தி முந்திரி பருப்பு, முந்திரி ஆயில் எடுக்கப்பட்டு 4 லட்சம் டன் முந்திரி பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பல லட்சம் பேருக்கு இத்துறை வேலை வாய்ப்பை அளிக்கிறது. முதன் முதலாக முந்திரிப் பருப்பை ஏற்றுமதி செய்யத் தொடங்கிய நாடு இந்தியா. 1955ம் ஆண்டு இதன் ஏற்றுமதியை ஊக்குவிக்க “ இந்திய முந்திரிப் பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்” தொடங்கப்பட்டது.
இதன் பணிகள் : இந்திய ஏற்றுமதியாளர்களை வெளிநாட்டு இறக்குமதியாளர்களுடன் சந்திக்க வைப்பது. ஆர்டர்கள் பெற்றுத் தருவது. இந்திய முந்திரிப் பருப்பின் தரம் பற்றி வெளி நாடுகளில் பிரசாரம் செய்வது. வெளிநாடுகளில் நடக்கும் கண்காட்சிகளில் உறுப்பினர்களை கலந்து கொள்ளச் செய்தல்.
இந்தியாவில் பண்ருட்டி, கோவா, கொல்லம், ஐதராபாத், தாசர்கோடு, மங்களூர் என பல ஊர்களில் முந்திரிப் பருப்பு பதப்படுத்தும் பெரிய நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு 40 கோடி ரூபாய் மானியம் இந்த கவுன்சில் வழங்கியுள்ளது. இந்த கவுன்சில் 1977ம் ஆண்டு கேரள மாநிலம் கொல்லத்தில் ஒரு சிறந்த “CEPC லேபரட்டரியை” தொடங்கியது. முந்திரியை சோதனை செய்து தரச்சான்று தர மட்டுமல்ல பலவகை உணவுப் பொருட்களை சோதிக்கவும் பயன்படுகிறது. தரத்தை பரிசோதிக்க பல பயிற்சிகளையும் இந்த நிறுவனம் வழங்குகிறது. பலவகை, உணவுப் பொருட் களைப் பற்றி பரிசோதிக்கவும், அதன் தரம் பற்றி படிக்கவும் இந்நிறுவனம் உதவுகிறது. தண்ணீர், மூலிகைகள், மீன், பால் பொருட்கள், தேன், பழம், இறைச்சி, பேக்கரி பொருட்களை பரிசோதிக்கவும், தரச்சான்று வழங்கவும் இந்த பரிசோதனைக் கூடம் உதவுகிறது.
இந்த கவுன்சில் பற்றி அறிந்து உதவி பெற Cashew Export Promotion Council of India, Cashew Bhavan, Mundakel, Kollam 691 001, Kerala. Ph: 0474 274 2704, www.cepc.org.inwww.cashewindia.org.
கீழ்கண்ட வலைதளங்களையும் பார்த்து இத்துறை பற்றி நன்கு அறியலாம்.
www.fao.orgwww.tnau.ac.in
www.mofpi.gov.in
www.cepclab.org.in,
www.kerelaagriculture.gov.in.
-எம்.ஞானசேகர்,
தொழில் ஆலோசகர்,
93807 55629


Source : Dinamalar

நடவு இயந்திரம் மூலம் கூடுதல் மகசூல் - சிவகங்கை விவசாயி சாதனை

இருக்கும் நீரை பயன்படுத்தி, குறைந்த செலவில் 150 நாள் பயிரான பொன்னி ரக நெல் நாற்றுகளை 'நடவு இயந்திரம்' மூலம் நடவு செய்து, ஏக்கருக்கு 20 சதவீதம் கூடுதல் நெல் மகசூல் கண்டு வருகிறார் சிவகங்கை,வாணியங்குடி விவசாயி கே.கண்ணா சுப்பிரமணியம்.

அவர் கூறும்போது: 30 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால், இயந்திரங்கள் மூலம் நாற்று போடுதல், நடவு செய்தல் மூலம் நெல் நடவு பணிகளை செய்தேன். இந்த முறை மூலம், வேலைப்பளு குறைவு, நோய் தாக்குதல் இருக்காது. தண்ணீர் தேவையும் குறையும். 
இயந்திரமின்றி வயலில் நெல் நாற்று நடவு செய்வதால் உழவு, நாற்று நடுதல், களைஎடுத்தல், நெல் அறுவடை வரை ஏக்கருக்கு ரூ.22 ஆயிரம் செலவாகும். கூலி ஆட்கள் பற்றாக்குறையால் நாற்று நடுதல், களைஎடுத்தல், அறுவடை செய்ய விவசாயி பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டி வரும். 
இப்பிரச்னையை மீறி நெல் அறுவடை செய்தால், ஏக்கருக்கு 45 (மூடை 65 கிலோ) மூடை தான் கிடைக்கும். ஆனால், எனது நிலத்தில் நெல் நாற்று பதியம் போடுவது முதல், வயலில் நெல் நாற்று நடவு செய்தல், அறுவடை செய்தல் போன்று அனைத்து பணிகளும் இயந்திர உதவியுடன் நடக்கிறது. இதனால், செலவு குறைவதோடு, திருந்திய நெல் சாகுபடி போன்று இயந்திரம் மூலம் நெல் நாற்றுகளை தள்ளி, தள்ளி நடுவதால், வேர் பிடிப்பு அதிகரித்து மகசூலும் அதிகரிக்கும். இதன் காரணமாக ஏக்கருக்கு வழக்கத்தை விட 20 முதல் 30 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும்.
நெல் நாற்று விற்பனை: நெல் நடவு செய்வதோடு மட்டுமின்றி பிற விவசாயிகளுக்கும் இயந்திர முறையில் நாற்று போட்டு, வயலில் நட்டு தரும் பணிகளையும் செய்கிறேன். ஏக்கருக்கு 15 கிலோ விதை நெல்லை என்னிடம் வழங்கினால், இயந்திரம் மூலம் பதியம் போட்டு, சொட்டு நீர் பாசனம் மூலம் நாற்று வளர செய்து, 15 நாட்களில் நெல் நாற்றுகளை பறித்து விவசாயிகள் வயலில் நடவு செய்யப்படும். நாற்று போடுவது முதல் வயலில் நடும் வரை அனைத்து செலவுடன் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம். இங்கு கோ51, 
ஏ.டீ.டி.,45 ரக நெல் அதிகம் நடப்படுகிறது. குறைந்த நாளில் அறுவடை செய்யும் நெல்லில் மினரல் சத்து குறைவு. இதற்காக அதிக மினரல் சத்துள்ள 150 நாட்கள் வரை விளையும் பொன்னி ரக நெல்லை நடவு செய்துள்ளேன், என்றார்.
தொடர்பு கொள்ள 98424 92261. 
என்.வெங்கடேசன், சிவகங்கை.

Source : Dinamalar

உலக அளவில் 70 சதவீத மாம்பழங்கள் இந்தியாவில் உற்பத்தி வேளாண்மை ஆராய்ச்சிக்கழக முதன்மை துணை இயக்குனர் தகவல்



பெரியகுளம்
உலக அளவில் 70 சதவீத மாம்பழங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்று வேளாண்மை ஆராய்ச்சிக்கழக முதன்மை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கருத்தரங்குதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் இயற்கைவள மேலாண்மை இயக்குனரகம் இணைந்து நானோ அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை சார்பில் நானோ தொழில் நுட்பத்தின் மூலம் பழங்களை பாதுகாத்தல் என்ற திட்டத்தில் மா சாகுபடி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் பாலமோகன் தலைமை தாங்கினார்.
பழவியல் துறை தலைவர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார். பேராசிரியர் கே.எஸ்.சுப்பிரமணியன் திட்டம் குறித்து விளக்கி பேசினார். தமிழ்நாடு பழ உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் அருண், தமிழ்நாடு வாழை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் கருப்பையா, கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயி சாந்தகுமார், பெரியகுளம் மா விவசாயிகள் சங்க தலைவர் எம்.ஜி.சந்தானம் ஆகியோர் பேசினார்கள்.
முதன்மை துணை இயக்குனர்புதுடெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழக தோட்டக்கலை முதன்மை துணை இயக்குனர் என்.கே.கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு கருத்தரங்கினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
பழங்களின் அரசன் என்று அழைக்கப்படும் மாம்பழம், உலகளவில் 70 சதவிகிதம் இந்தியாவில் தான் உற்பத்தியாகிறது. எனினும் இந்தியாவில் நிலவும் வெப்பநிலை, குறைந்த எண்ணிக்கையில் குளிர்சாதன கட்டமைப்பு, அறுவடைக்கு பிந்தைய தொழில் நுட்பங்களை கடைபிடிக்காதது ஆகிய காரணங்களால் 30 முதல் 35 சதவீத பழங்கள் வீணாகி பெருமளவில் சேதம் ஏற்படுகின்றது. இவ்வாறு ஏற்படும் இழப்பினால் மக்களுக்கு கிடைக்கக்கூடிய பழங்களின் அளவு வெகுவாக குறைகிறது.
ரூ.30½ கோடிஇந்த பேரிழப்பை தடுக்க கனடா நாட்டின் ஆராய்ச்சி நிறுவனம் முன்வந்து நிதியுதவி செய்துள்ளது. கனடா பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கனடா அரசு இணைந்து நானோ தொழில் நுட்பம் மூலம் மாம்பழங்களை கெடாமல் பாதுகாத்தல் என்ற ஆராய்ச்சி திட்டத்தினை சர்வதேச உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி நிதியின் கீழ் மொத்தமாக ரூ.30 கோடியே 50 லட்சம் வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தில் 7 முதன்மை ஆராய்ச்சி நிலையங்களான தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் கல்ப் பல்கலைக்கழகம், கனடா தொழில்நுட்ப நிலையம், இலங்கை கொகைன் வேளாண் பல்கலைக்கழகம், டான்சானியா, நைரோபி, கென்யா, மேற்கு இந்திய தீவுகள் ஆகியவற்றின் பல்கலைக்கழங்கள் இணைந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ரூ.11 கோடியே 40 லட்சம் கிடைத்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள் அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பீட்டை குறைத்து, மாம்பழங்களின் தரத்தினை உயர்த்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகும்.
மேற்கண்டவாறு அவர் பேசினார். விவசாய கருத்தரங்கில் மாநில அளவில் 500–க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கு முடிவில் பேராசிரியை ஜானவி நன்றி கூறினார்.

Source : Dailythanthi

New species of fish discovered in Arunachal Pradesh



New species of Glyptosternine catfish has been discovered.  (Photo: Representative image)
Itanagar: A new species of glyptosternine catfish, christened Exostoma Tenuicaudata has been discovered by scientists of Zoological Survey of India (ZSI).
This is only one of nine species under the Exostoma genus found in the world and second discovery of the genus in over a century, ZSI scientists said.
A team of ZSI scientists caught the fish from Siang river in Upper Siang district here recently and the report of the discovery was published in 'Zootaxa', a New Zealand-based science journal.
Glyptosternines are highly specialised sisorid catfishes with greatly depressed body profiles, enlarged, horizontally extended paired fins, modified for adhesion, typically inhabiting torrential waters in rocky mountain streams and rivers, the report stated.
Genus 'Exostoma' is different from other glyptosternines in having a continuous post-labial groove in the lower jaw, gill openings do not extend on to venter, teeth in upper and lower jaws are homodont and oar-shaped and flattened distally.
It has tooth patches in upper jaw separated, not produced posteriorly at sides, 10-11 (10-12 herein) branched pectoral fin rays, dilator opercula and levator opercula are isolated, anterior end of sternohyoideus is broad and its width is almost equal to that of this muscle in axilla of pectoral fin.
The adductor pelvicalis superficialis partially contacts with its antimere in the midline, the report added.
"Arunachal's rich biodiversity has not been explored yet," ZSI officer-in-charge Bikramjit Sinha who led the teamsaid while advocating its complete documentation.

Source : Deccan Chronicle 

நாகை மாவட்டத்தில் பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் காப்பீடு செய்ய நாளை கடைசி

நாகை மாவட்டத்தில் பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் காப்பீடு செய்ய நாளை கடைசி நாளாகும். தேசிய வேளாண் பயிர் காப்பீடு நிறுவனத்தின் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் நடைமுறை படுத்தப்படும் சம்பா மற்றும் தாளடி நெற்பயிருக்கு 2015-16ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு பிரிமிய தொகையாக ஏக்கருக்கு சிறு குறு விவசாயிகள் ரூ.134, இதர விவசாயிகள் ரூ.149 பிரிமிய தொகையாக செலுத்தி காப்பீடு செய்து கொள்ள வேண்டும். பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான பிரிமிய தொகை செலுத்த நாளை (31ம் தேதி) கடைசி நாளாகும். எனவே விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்வது தொடர்பாக உரிய ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்று தாங்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ள தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்ககளில் தவறாமல் பயிர் காப்பீடு செய்து இயற்கை சீற்றங்களால் பயிருக்கு ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Source : Dinakaran

Food safety myths busted



Representational Image

This time of year,  most fridges are stocked up with food and drinks to share with family and friends. Let’s not make ourselves and our guests sick by getting things wrong when preparing and serving food. As the weather warms up, so does the environment for micro-organisms in foods, potentially allowing them to multiply faster to hazardous levels. So, put the drinks on ice and keep the fridge for the food. But what are some of those food safety myths we’ve long come to believe that aren’t actually true?
 
Myth 1: Wash meat before you prepare and/or cook it
It is not a good idea to wash meats and poultry when preparing for cooking. Splashing water that might contain potentially 
hazardous bacteria around the kitchen can create more of a hazard if those bacteria are splashed onto ready-to-eat foods or food preparation surfaces. It is, however, a good idea to wash fruits and vegetables before preparing and serving, especially if they’re grown near or in the ground as they may carry some dirt and therefore micro-organisms.
 
Myth 2: Hot food should be left out to cool before putting it in the fridge
It’s not OK to leave perishable food out for an extended time or overnight before putting it in the fridge.
 
Micro-organisms can grow rapidly in food at temperatures between 5° and 60°C. Temperature control is the simplest and most effective way of controlling the growth of bacteria. Perishable food should spend as little time as possible in the 5-60°C danger zone. If food is left in the danger zone, be aware it is potentially unsafe to eat.
 
Hot leftovers, and any other leftovers for that matter, should go into the fridge once they have stopped steaming to reduce condensation, within about just 30 minutes.
 
Myth 3: If it smells OK, |then it’s OK to eat
This is definitely not always true. Spoilage bacteria, yeasts and moulds are the usual culprits for making food smell off or go slimy and these may not make you sick, although it is always advisable not to consume spoiled food. Pathogenic bacteria can grow in food and not cause any obvious changes to the food, so the best option is to inhibit pathogen growth by refrigerating foods.
 
Myth 4: Don’t worry, Oil preserves food
Adding oil to foods will not necessarily kill bugs lurking in your food. The opposite is true for many products in oil if anaerobic micro-organisms, such as Clostridium botulinum (botulism), are present in the food. A lack of oxygen provides perfect conditions for their growth.
 
Outbreaks of botulism arising from consumption of vegetables in oil – including garlic, olives, mushrooms, beans and hot peppers – have mostly been attributed to products not properly prepared.
 
Myth 5: if you’ve defrosted frozen meat you can’t refreeze it
From a safety point of view, it is fine to refreeze defrosted meat or chicken or any frozen food as long as it was defrosted in a fridge running at 5°C or below. Some quality may be lost by defrosting and then refreezing as food can become slightly watery. Another option is to cook the defrosted food and then divide into small portions and refreeze once it has stopped steaming. Steam in a closed container leads to condensation, which can result in pools of water forming. This, combined with the nutrients in the food, creates the perfect environment for microbial growth. So it’s always best to wait about 30 minutes before refrigerating or freezing hot food. Plan ahead so food can be defrosted in the fridge, especially with large items.

Source : Deccan Chronicle 
 

Time to save your heart from Hepatitis C attacks



Representational Image (Photo: DC/File)

Hyderabad: Hepatitis C not only affects the liver but also the heart, states a recent study done by Dr Naga V. Pothineni from Hyderabad at the University of Arkansas for Medical Sciences published in the American Journal of Cardiology. 
 
The researchers examined 25,000 patients and compared the rate of heart attacks in patients with and without Hepatitis C. 
 
They found that patients with active Hepatitis C had a 59 per cent higher chance of developing a heart attack related event compared to patients without Hepatitis C, even though they had the same cardiac risk factors like hypertension and diabetes.
 
Dr Pothineni said, “Results of this study have important implications. Novel therapies are being developed and most patients with Hepatitis C can now hope for a cure. Identifying Hepatitis C as a significant risk factor and treating it might help not only for recovery of liver function, but can also decrease the risk of heart disease in this population.”

Source : TOI

கோவையில் இயற்கை முறை வேளாண் பயிற்சி பட்டறை தஞ்சையிலிருந்து 50 பேர் உள்பட1,500 விவசாயிகள் பங்கேற்பு

இயற்கையான முறையில் செலவில்லாமல் விவசாயம் செய்வது பற்றி  கோவை மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற 8 நாள் பயிற்சிப் பட்டறையில் தஞ்சை மாவட்டத்தில் 50 பேர் உள்பட தமிழகத்திலிருந்து 1,500 இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிர்களுக்கு யூரியா, பொட்டாஷ், டிஏபி உள்ளிட்ட ரசாயன உரங்களை வைப்பதால் மண் மலடாகி விடுவதுடன் மக்களுக்கு சர்க்கரை நோய், இருதய அடைப்புகள், மூட்டுவலி, சரும நோய், புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட்டு அவதியுற்று உணவே விஷமாகும் சூழ்நிலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் விவசாயிகளிடையே தற்போது விழிப்புணர்வு காரணமாக ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை விவசாயத்திற்கு பெரும்பாலான விவசாயிகள் மாறி வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர் தமிழ்நாட்டை சேர்ந்த 1,500 இயற்கை விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி மற்றும் ஒரு பைசா செலவில்லாத இயற்கை உரம் தயாரிப்பு குறித்து 8 நாள் பயிற்சி அளித்துள்ளார். இதில் கும்பகோணம் அடுத்த ஏராகரம் கிராமத்திலிருந்து இயற்கை விவசாயிகள் சுவாமிநாதன், சவுந்தரராஜன், செல்வராஜ், உதயகுமார், தங்கையன் உள்பட தஞ்சை  மாவட்டத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர்.  பயிற்சி பெற்ற சுவாமிநாதன் கூறுகையில், நான் பல ஆண்டுகளாக 15 ஏக்கர் பரப்பில் நெல் மற்றும் கரும்பு விவசாயம் செய்து வருகிறேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரசாயன உரங்களை இட்டு  பயிர் செய்தேன். ரசாயன உரங்களின் விலை அதிகம். பூச்சி தாக்குதல், மக்களை தாக்கும் மர்ம நோய்கள், சாகுபடி செய்யும் மண்ணே மலடாகி விடுகிறது. இதனால் ஏராளமான மக்கள் நோயினால் அவதிக்குள்ளாகி வருவது அறிந்து மனம் வெதும்பி பிறகு கடந்த 5 வருடமாக ரசாயன உரங்களை முழுவதுமாக விட்டு விட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். முன்பெல்லாமல் நெல்லுக்கு இயற்கை உரமான பஞ்சகவ்யம், அமிர்த கரைசல் பயிர்களுக்கு தெளித்தேன். இதனால் நெல் பயிர்கள் நன்றாக செழிப்புடன் அதிக மகசூல் கிடைத்தது. இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் நாட்டுக்கு விஷமற்ற உணவு பொருளை வழங்க முடிகிறது. மேலும் இதற்கு அடுத்த கட்டமாக தற்போது கடந்த வாரத்தில் பல்லடத்தில் நடைபெற்ற சுபாஷ்பலேக்கரின் செலவில்லா இயற்கை விவசாய பயிற்சி முகாமில் எங்களுக்கு நுண்ணுயிர் உற்பத்தியாகும் செலவில்லா உரக்கரைசலை தயாரிக்க பயிற்சியளித்தனர். இந்த பயிற்சியில் நெல்லுக்கு, நாட்டு பசுவின் சாணம் 1 கிலோ, ஹோமியம் 10 லிட்டர், உளுந்து மாவு 1 கிலோ, நாட்டு சர்க்கரை 1 கிலோ, வரப்பு மண் 1 கைப்பிடி இத்துடன் 200 லிட்டர் தண்ணீல் கலந்து கடிகார சுற்றில் ஒரு நாளைக்கு 2 தடவை 1 நிமிடம் வீதம் கலக்க வேண்டும். இதனால் ஏக்கருக்கு மகசூல் சுமார் 35 மூட்டைகளுக்கு மேல் கிடைக்கும். ஆனால் இதற்கான செலவு விவசாயிகளுக்கு ஒரு பைசா கூட செலவில்லாமல், இந்த கரைசலில் கலக்கப்படும் பொருட்கள் அனைத்தும் நமக்கு வீட்டில் அருகில் கிடைக்கும் செலவில்லாத பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதுவே ரசாயன உரங்களை பயன்படுத்தி இருந்தால் ஒரு விவசாயி ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன் அதற்கான மகசூலை விவசாயிகள் எதிர்பார்க்க முடியாது. அத்துடன் சுற்றுப்புற சூழல் சீர்கேடு, விஷமுள்ள உணவுகளை உண்பதால் மக்களுக்கு கொடிய நோய்கள் ஏற்படும். இந்த செலவில்லா இயற்கை உரத்தை தயாரிக்கும்  முறையை அரசே ஏற்று விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்டம், கிராமங்கள் தோறும் இதுபோன்ற முகாம்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி அரசே நடத்த வேண்டும். அதனை முன்னிட்டு இந்த இயற்கை முறையில் செலவில்லா இயற்கை விவசாயத்தை விவசாயிகள் அனைவரும் கடைபிடித்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Source : Dinakaran

நெற் பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை செய்வது எப்படி? விவசாயிகளுக்கு பயிற்சி

நெற் பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை செய்வது எப்படி? என்பது குறித்து அரிமளம் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் பயிற்சி அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரம் நெடுங்குடி கிராமத்தில் வேளாண் துறை சார்பில் பண்ணைப் பள்ளி நடத்தப்பட்டுவருகிறது. இப்பண்ணைப் பள்ளியில் 4ம் வகுப்பு பாடமாக வளர்ச்சிப் பருவத்தில் நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது, மேலும், நோய்த் தாக்குதலால் ஏற்படும் பொருளாதாரச் சேதம், நுண்ணூட்ட குறைவால் நெற் பயிரில் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் நுண்ணூட்டம் இடுவதன் அவசியம் என நெற்பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வளர்ச்சிப் பருவத்தில் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் குறித்து அரிமளம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் உதயகுமார் விளக்கமாக எடுத்துரைத்தார். வளர்ச்சிப் பருவத்தில் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உழவியல் முறை, நேரடி அழிப்பு முறை, உயிரியல் முறை ஆகியன குறித்தும், நன்மை, தீமை செய்யும் பூச்சிகள் குறித்தும் அப்போது அவர் தெளிவாக எடுத்துக் கூறினார். அத்துடன் விளக்குப் பொறி, இனக் கவர்ச்சிப் பொறி அமைத்தல் குறித்து செயல் விளக்கம் அளித்தார். இதே போல், வயல்களில் நன்மை செய்யும் பூச்சிகளான பொறி வண்டு, ஊசி தட்டான், சிலந்தி ஆகியவற்றை காண்பித்து விளக்கினார். அப்போது அவர், சிலந்திகள் வயல்களில் பெருக்கமடைய சிறிய குச்சிகளைக் கொண்டு பந்தல் அமைக்க வேண்டும் என்றும், பொறி வண்டுகள் பெருகிட வரப்பில் தட்டைப்பயறை பயிரிட வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் முகமது ஷாஜஹான், நெற்பயிருக்கு நுண்ணூட்டம் இடுவதன் அவசியம், நுண்ணூட்டப் பற்றாக்குறையால் நெற்பயிரில் தென்படும் அறிகுறிகள் குறித்துப் பேசினார். இதில் நெல் நுண்ணூட்டம் குறித்து செயல் விளக்கம் அளித்தார். குறிப்பாக, ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்டம் 20- 30 கிலோ மணலுடன் கலந்து நடவுவயலில் இடும் முறை பற்றி செயல் விளக்கம் அளித்தார். வேளாண் உதவி அலுவலர், வட்டாரத் தொழில்நுட்ப உதவி மேலாளர் விக்னேஷ் ஆகியோர் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலால் உண்டாகும் மகசூல் சேதத்தை விளக்கிக் கூறினார். அத்துடன் இதை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.

Source : Dinakaran

Tuesday, December 29, 2015

8 superfoods that cut belly fat

http://timesofindia.indiatimes.com/life-style/photo-stories/health-fitness/8-superfoods-that-cut-belly-fat/photostory/45942485.cms

Source : Times of India

Rare butterfly sighted at Arippa forests



Rare sight:The Banded Royal spotted in the Arippa forest area last week.
Rare sight:The Banded Royal spotted in the Arippa forest area last week.
Nature lovers from the Thiruvananthapuram-based Warblers and Waders chanced upon a ‘very rare’ Banded Royal-Rachana jalindra (Horsfield) butterfly at the Arippa Ammayambalampacha forests on the borders of Kollam-Thiruvananthapuram districts during a two-day nature watching camp organised in connection with the silver jubilee of the organisation.
The group described the sighting as incredibly rare because the Banded Royal was last sighted in these forests 10 years ago. C. Susanth, who led the group, said the butterfly was seen settling for a long period basking in the sun and that ‘provided us the opportunity to click some great photos of the winged beauty’. The trail was conducted in with support from the Forest Department.
The colour of the spotted Banded Royal’s wing was pure white below and a brown band on the upper side both on the fore and the hind wings. The hind wings were a bit worn out. Mr. Susanth said that Banded Royals are considered rare to very rare in Kerala. Very few sightings of this butterfly were reported from Aralam Wildlife Sanctuary (Kannur) and Vazhchal-Athirapilly reserve forests (Thrissur) in the past.
The natural habitat of these butterflies is thick forests below 5,000 feet. They usually settled on the undersides of leaves, are not is not very active flyers, and rarely come to flowers or damp patches. The one spotted at Arippa was found settling on a leaf along the trekking path. During the camp, 60 species of butterflies were recorded.
Mr. Susanth said significant butterfly sightings were aberrant oak blue, Malabar rose, Travancore evening brown, Malabar banded swallowtail, Indian ace, Tamil grass dart and black-veined sergeant. The endemic damselflies Malabar torrent dart, Travancore bambootail and jungle grass dart were observed by the team.
Eighty bird species, which included the brown fish owl, grey headed bulbul, black Eagle, sparrow hawk, and great eared nightjar, were also observed. R. Jayaprakash, K.A. Kishore, B.V. Premkrishnan and Dr. Abhiram Chandran.

Source : The Hindu

Training

Thirty farmers will get training in apiculture at the Vengeri Training Centre from January 6 to 8 under the Human Resource Development programme. Farmers who have not taken part in the training previously shall contact 0495-2373582 to register. — Staff Reporter

Source : The Hindu

Duck rearing proves lucrative in Erode



Duck meat consumption is picking up in Erode district.— PHOTO: M. GOVARTHAN
Duck meat consumption is picking up in Erode district.— PHOTO: M. GOVARTHAN
Duck rearing is becoming visible on the city’s peripheries and rural pockets of the district.
The rearers, usually, belong to far-off places and take the duck along to harvested fields where fallen grains and insects are eaten by the birds.
Eggs of ducks are considered nutritious and rich source of protein. Rearers create small ponds for the flock of birds that are obtained as chicks from Andhra Pradesh and grown here.
The rearers sell the live birds for Rs. 180 to Rs. 200 per kg. to meat sellers, who, in turn, make a margin of 30 to 40 per cent in the selling cost. Still, it is affordable for people The trend of eating duck meat is picking up among the people. Cooked duck meat is also sold on the city outskirts.
At the retail point, ducks are sold alongside chicken. A normal-size duck is sold for Rs. 250, sellers say.
According to Animal Husbandry Department sources, the trend of duck meat consumption has gradually spread to Erode from neighbouring Karur district.
Unlike in the case of poultry, ducks do not require housing. The wet fields close to water bodies are the ideal spots for their rearing.
According to farmers, fish ponds are specifically created in some fields for rearing ducks. Alongside providing essential nutrients to increase biomass of natural food organisms, the duck droppings serve as fish feed resulting in high yield. Disturbance caused to the surface of the pond facilitates aeration.
As in the case of poultry, ducks also need to be immunised against duck plague. Rearers are following the schedule of vaccinating ducks once every year, Joint Director of Animal Husbandry Department P. Ravichandran said.

Source : The Hindu

Paddy procurement in Koppal from January 1



  • M. Kanagavalli, Deputy Commissioner, presiding over a meeting of the district task force in Koppal on Tuesday.
M. Kanagavalli, Deputy Commissioner, presiding over a meeting of the district task force in Koppal on Tuesday.
Government agencies will start procuring paddy at the minimum support price from January 1. Two procurement centres have been set up at the Agricultural Produce Marketing Committee yards in Gangavati and Karatagi in Koppal district, according to Kanagavali, Deputy Commissioner.
Presiding over a meeting of the district task force here on Tuesday, she said that ordinary paddy would be procured at Rs. 1,510 per quintal, and Grade-A paddy at Rs. 1,450.
The market price for paddy is good now and farmers could prefer to sell it to procurement centres before they crash. Maldandi jowar too would be procured at these centres at the minimum support price of Rs. 2,100 per quintal (Rs. 1,590 announced by centre and Rs. 510 as incentive given by State government).
Karnataka State Marketing Federation is the nodal purchasing agency for Koppal district.
Ms. Kanagavalli instructed officials to arrange godowns to store the foodgrains and remit the value through RTGS directly to the farmers’ bank account. She directed the Agriculture Department to arrange for graders at the centres.
Ramadas, Joint Director of Agriculture, informed the meeting that paddy was cultivated on around 39,920 hectares and the yield was expected to be around 1.71 lakh tonnes.
Maldandi was grown in 25,630 ha and the anticipated yield was around 14,117 tonnes.
Karnataka State Marketing Federation is the nodal purchasing agency

Source : The Hindu

Commodity prices


In 2015, though headline inflation was down, the aam aadmi still paid through the nose for basics. His household budget hit the roof, with prices of vegetables and pulses skyrocketing. Tomato, garlic and chilli saw prices double. Brinjal and bitter gourd were dearer by 50-70 per cent. Gram, tur and urad dal saw prices jump 50-100 per cent

Here are the prices of various commodities in Chennai.
Price scale is given as Rs./kg
CommodityQuantityNowYear ago
Rice1 kg3030
Wheat1 kg3432
Atta1 kg3034
Gram Dal1 kg7549
Tur Dal1 kg14686
Urad Dal1 kg17086
Moong Dal1 kg120111
Masoor Dal1 kg9680
Sugar1 kg3234
Milk1 ltr3737
Ground Nut Oil1 ltr129101
Sun flower Oil1 ltr9185
Gur (Jaggery)1 kg4657
Tea1 kg220220
Salt1 kg1817
Lime1 kg6050
Apple1 kg140150
Papaya1 kg3025
Pineapple1 kg3535
Pomegranate1 kg120140
Sapota1 kg4040
Banana1 kg3232
Bitter Gourd1 kg5832
Brinjal1 kg9028
Cabbage1 kg2424
Cauli Flower1 kg4532
Garlic1 kg240120
Ginger1 kg90120
Chilly1 kg4032
Onion1 kg2524
Potato1 kg2426
Tomato1 kg3618
*Source: Ministry of Consumer Affairs, National Horticulture Board

Source : The Hindu

சரியான முறையில் உரமிட்டால் ஒரு தென்னை மரத்தில் ஆண்டுக்கு 200 காய்கள் மகசூல் பெறலாம் வேளாண் அதிகாரி வழிகாட்டல்

சரியான முறையில் தென்னைக்கு உரமிட்டால் ஆண்டுக்கு 200 காய்கள் வரை மகசூல் பெறலாம் என்று வேளாண் அதிகாரி தெரிவித்தார். இது குறித்து பட்டுக்கோட்டை அடுத்த திருவோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மதியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நெட்டை ரக தென்னைக்கான உர பரிந்துரைகள்:-நடவு செய்தது முதல் ஒரு வருட கன்று ஒன்றுக்கு தொழு உரம் 10 கிலோ, யூரியா 0.325 கிலோ, சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 0.5 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 1.5 கிலோ, 2 வருட கன்று ஒன்றுக்கு தொழு உரம் 20 கிலோ, யூரியா 0.650 கிலோ, சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 1 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 2.5 கிலோ, 3 வருட கன்றுக்கு தொழு உரம் 30 கிலோ, யூரியா 0.975 கிலோ, சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 1.5 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 3.750 கிலோவும், 4 வருட கன்றுக்கு தொழு உரம் 40 கிலோ, யூரியா 1.3 கிலோ, சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 2 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 5 கிலோவும்,5 வருடம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மரங்களுக்கு தொழுஉரம் 50 கிலோவும், யூரியா 1.3 கிலோ சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 2 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 5 கிலோவும் இட வேண்டும். செம்பான் சிலந்தி தாக்குதல் காணப்படும்5 வருடத்திற்கு மேற்பட்ட மரங்களுக்கு  2 கிலோ என்பதற்கு பதிலாக 3.5 கிலோ வரை பொட்டாஷ் சேர்த்து இடலாம். நெட்டை-  குட்டை மற்றும் குட்டை -நெட்டை வீரிய ஒட்டு ரக தென்னைக்கான உர பரிந்துரைகள் : நடவு செய்தது முதல் ஒரு வருட கன்று ஒன்றுக்கு தொழு உரம் 15 கிலோ, யூரியா 0.5 கிலோ, சூப்பர் 0.375 கிலோ, பொட்டாஷ் 0.750 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 1.5 கிலோவும், 2வருட கன்றுக்கு தொழு உரம் 30 கிலோ, யூரியா 1 கிலோ, சூப்பர் 0.750 கிலோ, பொட்டாஷ் 1.5 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 2.5 கிலோவும்,3 வருட கன்றுக்கு தொழு உரம் 45 கிலோ, யூரியா 1.5 கிலோ, சூப்பர் 1.150 கிலோ, பொட்டாஷ் 2.250 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 3.750 கிலோவும், 4வருடம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மரம் ஒன்றுக்கு தொழுஉரம் 60 கிலோ, யூரியா 2.250 கிலோ, சூப்பர் 1.5 கிலோ, பொட்டாஷ் 3 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ இட வேண்டும். மேற்கண்ட உர பரிந்துரை அளவினை இரு சம பங்காக பிரித்து வருடத்தில் இருமுறை இட வேண்டும். அதாவது மார்கழி, தை (டிசம்பர்- ஜனவரி) மாதங்களில் ஒருமுறையும், ஆனி, ஆடி (ஜுன் - ஜூலை) மாதங்களில் ஒரு முறையும் இட வேண்டும்.  பேரூட்டச்சத்துக்களை கொடுக்கக் கூடிய மேற்கண்ட உரங்களை இட்ட 30 முதல் 45 நாட்கள் கழித்து நுண்ணூட்டச் சத்துக்களைக் கொடுக்கக் கூடிய தென்னை நுண்சத்து உரத்தினை மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம் வருடத்தில் இரண்டு முறை சரிபாதியாக பிரித்து  இட வேண்டும் (அல்லது) மரம் ஒன்றுக்கு போராக்ஸ் 50 கிராம், ஜிப்ஸம் 1 கிலோ மற்றும் மெக்னீசியம் சல்பேட் 0.5 கிலோ ஆகியவற்றை கலந்து மரத்தை சுற்றி வருடத்திற்கு ஒருமுறை இட வேண்டும். இடக்கூடிய பேரூட்டம் மற்றும் நுண்ணூட்ட உரங்களை மரத்தைச் சுற்றி 5 அடி தூரத்தில் இட்டு மண்ணை கிளறிவிட்டு உடனடியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 
இவ்வாறு முறையாக உரமிடும் பட்சத்தில் குரும்பை உதிர்தல், ஒல்லிக்காய், காய்களில் வெடிப்பு, நீள வடிவிலான வெற்றுக்காய்கள் ஆகிய பிரச்சனைகள் குறைந்து ஆண்டு ஒன்றுக்கு மரம் ஒன்றுக்கு சராசரியாக 150 முதல் 200 தேங்காய்கள் வரை நிச்சயம் மகசூல் எடுக்க முடியும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Source : Dinakaran

மண்வளத்தை நிலை நிறுத்தும் உளுந்து : மானாவாரி ஆராய்ச்சி நிலையம்


"அறுவடை மேற்கொள்ளும் விவசாயிகள் அடுத்ததாக நிலத்தை தரிசாக போடாமல், மண்வளத்தை நிலை நிறுத்தும் விதமாக உளுந்து பயிரிடவேண்டும்,' என வேளாண் ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கிறது.
ஒரு எக்டேர் சத்தான மண்ணில் ஒரு சதவீதம் கரிம சத்தும்,300 கிலோ தழைச்சத்தும் 20 கிலோ மணிச்சத்தும், 200 கிலோ சாம்பல் சத்தும் இருக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை கரிமச்சத்து 0.4 சதவீதம் முதல் 0.7 சதவீதம் வரையே உள்ளன. நெல் நடவு செய்தவர்கள் மண் வளத்தை அதிகப்படுத்தும் உளுந்து பயிரை பயிரிட்டனர். உளுந்தானது வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை உட்கிரகித்து மண்ணின் தழைச்சத்தை அதிகரிக்கவல்லது. உதிரும் இலைகள் கரிமசத்தை அதிகரிக்கும். அதன் வேரில் உள்ள முடிச்சுகளில் தழைச்சத்தை கிரகித்து கொடுக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. இதனால், மண்வளம் மேம்பட்டு வந்தது. மழையின்மையால் அறுவடை முடிந்ததும் நிலத்தை தரிசாக போட்டு வந்தனர். இதனால் மண்வளம் குன்றி, போதிய விளைச்சல் பெற முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். இந்த ஆண்டு போதிய மழை பெய்துள்ளதால், பெரும்பாலான பகுதி கண்மாய்களில் நீர் இருப்பு உள்ளன. கடந்த ஆண்டில் விவசாயம் மேற்கொள்ளாதவர்களும் பருவம் தவறி விதைத்துள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் அறுவடை தொடங்க உள்ளது. அறுவடை முடிந்ததும் நிலத்தின் வளம் மேம்பட உளுந்து பயிரிடலாம் என செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. ஆராய்ச்சி நிலைய துறை தலைவர் மெர்டில் கிரேஸ் கூறுகையில், ""மழை ஓரளவு பெய்துள்ளதால் நெல் அறுவடை முடித்த விவசாயிகள் வம்பன் 5,6 கோ-6 உள்ளிட்ட உளுந்து வகைகளை தை பட்டத்தில் விதைக்கலாம். 65 முதல் 75 நாளில் விளைச்சல் கிடைக்கும். ஏக்கருக்கு 5 கிலோ விதை மட்டும் தேவைப்படும். 5 கிலோ விதையில் 50 கிராம் சூடோமோனஸ், 10 கிராம் டிரைக்கோ டெர்மாவிரிடி கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். உளுந்துக்கான சந்தை மதிப்பு அதிகரித்துள்ளதால், விவசாயிகள் லாபம் பெறலாம்,'' என்றார்.

Source : Dinamalar

தகவல் துகள்கள்: சூரிய ஒளியை அதிகம் உறிஞ்சும் மின் பலகை!



சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் மின்பலகைகளை, எந்த திசையைப் பார்த்தபடி வைக்கிறோம் என்பது மிக முக்கியம். ஏனெனில் அதைப் பொறுத்தே, மின்பலகைகள் எவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்பது முடிவாகும்.ஆனால், சவூதியிலுள்ள மன்னர் அப்துல்லா அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் தைவான் தேசிய மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள, ஒரு புதிய பொருள் அந்த நிலையை மாற்றக்கூடும்.சிலிக்கா என்ற பொருளைக்கொண்டு, இந்த விஞ்ஞானிகள் உருவாக்கிஉள்ள ஒரு புதிய பொருளை, சூரிய மின்பலகை மீதுள்ள கண்ணாடியில் பூசிவிட்டால், அது, சூரிய ஒளி எந்த திசையில் இருந்தாலும், பெரும்பாலும் ஈர்த்துக்கொள்ளக்கூடியது என்று பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.நேனோ அளவில், தேன்கூடு போன்ற 
கட்டமைப்பைக் கொண்டிருக்கும் சிலிக்கா பூச்சு, கிடைக்கும் சூரிய ஒளியை, பலகை மீது திசை திருப்பி, 5.2 முதல் 27.7 சதவீதம் வரை அதிக மின் உற்பத்திக்கு வழி வகுக்கிறது. இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு சூரிய ஒளி மின் தயாரிப்பு திட்டம் போடப்பட்டிருக்கிறது. இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகளையும், மத்திய அரசு கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்தியாவின் மின் பற்றாக்குறை கணிசமாகக் குறையும்.

Source : Dinamalar