Monday, September 21, 2015

தானிய ஈட்டுக் கடன்: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாதனை


தானிய ஈட்டுக் கடனில் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 113 சதவீத இலக்கை எட்டி ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணராஜ் விடுத்த செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் மூலம் வைப்புகள் திரட்டுதல், கடன் வழங்குதல் மற்றும் வசூலித்ததில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2014, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2015 மார்ச் 31-ஆம் தேதி வரை மத்திய வங்கி அளவில் வைப்புகள் சேகரிக்க குறியீடாக ரூ. 1,366 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதையும் தாண்டி ரூ.1,455 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிகம் ரூ. 89.33 கோடி அதிகம் எய்தியுள்ளது. 2014-15-ஆம் ஆண்டு பயிர்க்கடன் வழங்க மொத்தம் ரூ. 388 கோடி ஆகும். கடந்த 31.3.2015 வரை 6,589 பேருக்கு ரூ.394.48 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்களுக்கு வழங்கும் மத்திய காலக்கடன் வட்டி விகிதம் 13 சதவீதத்தில் இருந்து 11.50 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதால் அதிகளவு கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தானிய ஈட்டு கடன் வழங்க நமது வங்கிக்கு மாநிலத்திலேயே அதிக அளவாக ரூ. 45 கோடி குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதில் 31.3.2015 வரை ரூ. 51.07 கோடி வழங்கப்பட்டு 113 சதவீதம் எய்தப்பட்டு உள்ளது என்றார்.

http://www.dinamani.com/edition_coimbatore/erode/2015/09/21/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A4/article3039337.ece

No comments:

Post a Comment