திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தில் இயந்திரம் மூலம் நடவு செய்யப்படவுள்ள நெல் தட்டு நாற்றங்கால் முறையை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ச.பா.நடேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நல்லவன்பாளையம் கிராமத்தில் கருணாநிதி என்ற விவசாயி
இயந்திரம் மூலம் நெல் நடவு செய்ய தட்டு நாற்றாங்கால் முறையை அமைத்துள்ளார். இதை திருவண்ணாமலை
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ச.ப.நடேசன் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது விவசாயிகளிடம் அவர் கூறியது:
இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்கு
ஒரு எக்டருக்கு பின்னேற்பு மானியமாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும். திருவண்ணாமலை வட்டாரத்தைச்
சேர்ந்த விவசாயிகள் தங்களது வங்கி கணக்கு எண், ஆதார் அடையாள அட்டை எண் ஆகிய விவரங்களுடன்
வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்றார்.
ஆய்வின்போது, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய அரசுத்
திட்டம்) அ. பாலா, வேளாண்மை உதவி இயக்குநர் கோ. கண்ணகி, வேளாண்மை அலுவலர் லோ. அனுராதா,
உதவி வேளாண் அலுவலர்கள் கோவிந்தன், முருகன், கவுஸ்கான் ஆகியோர் உடனிருந்தனர்.http://www.dinamani.com/edition_vellore/thiruvannamalai/2015/09/21/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/article3038400.ece
No comments:
Post a Comment