முருக்கேரி : முருக்கேரி அடுத்த ஆலங்குப்பம்
கிராமத்தில், இயந்திரம் மூலம் நெல் விதைப்பு பணி செய்வது குறித்து செயல்விளக்க முகாம்
நடந்தது.
முகாமிற்கு ஊராட்சி தலைவர் ராமலிங்கம்
முன்னிலை வகித்தார். வடகோட்டிப்பாக்கம் ஊராட்சி தலைவர் சிவகுமார் வரவேற்றார். முகாமில்
வேளாண்மை துறை உதவி இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது : விவசாயிகள்
நவீன தொழில்நுட்பங்கள், இயந்திரம் மற்றும் புதிய நெல் ரகங்கள் மூலம் விவசாயம் செய்தால்,
ஏக்கருக்கு 4 ஆயிரம் கிலோ நெல் மகசூல் பெறலாம். இயந்திரம் மூலம் நடவு செய்வதால் 20
கிலோ நெல் விதை போதும். இதனால் மகசூல் அதிகரிக்கும்.இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும்
விவசாயிகளுக்கு அரசு சார்பில், ஏக்கருக்கு 3,000 ரூபாய் மான்யம் வழங்கப்படுகிறது. விவசாயிகள்
மான்யத்தை பெற சிட்டா, அடங்கல், இயந்திர நடவு புகைப்படம், வங்கி கணக்கு எண், ஆதார்
எண் மற்றும் ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடு ஆகிய விபரங்களை வேளாண்மை விரிவாக்க மையங்களில்
கொடுத்து பயன்பெறலாம்.இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் கூறினார்.வேளாண்மை
அலுவலர் எத்திராஜ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள்
மோகன்குமார், விஜயலட்சுமி, யமுனா,சுரேஷ், மஞ்சு, தொழில்நுட்ப வல்லுநர்கள் கோவிந்தசாமி,
வீராசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment