Wednesday, September 2, 2015

இயற்கை வழி வேளாண்மை பூட்டை கிராமத்தில் பயிற்சி


  
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
சங்கராபுரம் ஒன்றியம், பூட்டை கிராமத்தை இயற்கை வழி வேளாண்மை கிராமமாக, தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் தேர்வு செய்துள்ளனர். இங்குள்ள 60 விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.பூட்டை கிராம சமுதாய நல கூடத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு, மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் ரத்தினசபாபதி தலைமை தாங்கினார். பூட்டை ஊராட்சி தலைவர் கந்தசாமி, கூட்டுறவு வங்கி தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம், முகாமை துவக்கி வைத்தார். பிரபாகரன், விதைசான்று அலுவலர் சுந்தரம், வேளாண்மை அலுவலர்கள் சதீஷ்குமார், அப்துல்காதர் ஆகியோர் விளக்கவுரை நிகழ்த்தினர். பயிற்சி ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர்கள் பழனிவேல், மைக்கேல், நாசர், அப்பாஸ், செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.சங்கராபுரம் வேளாண் அலுவலர் விஜயகுமார் நன்றி கூறினார்.


http://www.dinamalar.com/district_detail.asp?id=1332530

No comments:

Post a Comment