Wednesday, September 2, 2015

செப்., 7ல் தீவனப்பயிர் சாகுபடி: விதை உற்பத்தி குறித்த பயிற்சி



நாமக்கல்: "வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 7ம் தேதி, தீவனப்பயிர் சாகுபடி, விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது' என, ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 7ம் தேதி, காலை, 9 மணிக்கு, தீவனப்பயிர் சாகுபடி மற்றும் விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இப்பயிற்சி முகாமில், கறவை மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு உகந்த தீவனப்பயிர் வகைகள், மண்ணின் தன்மைக்கேற்ற தீவனப்பயிர்கள், குறிப்பாக, மானாவாரி மற்றும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தானிய, பயறுவகை, புல்வகை மற்றும் மரவகைத் தீவனப்பயிர்கள் சாகுபடி குறித்து விளக்கப்படுகிறது. மேலும், அதில் உள்ள சத்துக்கள், புதிய ரகங்கள், விதை நேர்த்தி செய்யும் முறைகள், விதை அளவு, பயிர் இடைவெளி, விதைப்பு செய்தல், உரமிடுதல், சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனம் செய்தல், பல்வேறு தீவனப்பயிர்களில் விதை உற்பத்தி செய்யும் முறைகள், விதை சுத்திகரிப்பு, விதை சான்று பெறும் வழிமுறைகள் மற்றும் மரவகை தீவனப்பயிர்களில் நாற்றுகள் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்படும். அதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 6ம் தேதிக்குள், தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


http://www.dinamalar.com/district_detail.asp?id=1332824

No comments:

Post a Comment