Thursday, September 17, 2015

வேளாண் பொருள்களுக்கு மதிப்பு கூட்டுதல் பயிற்சி



வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாமைத் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வேளாண் பொருள்கள் மதிப்பு கூட்டுதல் பயிற்சி ஜமுனாமரத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் வடமலை தலைமை வகித்தார். கீழ்நெல்லி வேளாண் அறிவியல் நிலைய பயிற்சியாளர் மார்க்ரேட், வேளாண் அலுவலர் எழில் அரசு ஆகியோர் பயிற்சியளித்தனர்.
பயிற்சியின்போது விவசாய நிலங்களில் பயிரிடப்படும் விளைபொருள்களை நேரடியாக சந்தைக்கு கொண்டு விற்பதை விட ஊறுகாய், வத்தல் என மதிப்பு கூட்டி விற்றால் அதிக லாபம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் சாமையில் சர்க்கரைப் பொங்கல், காய்கறிகளில் சூப் தயாரித்தல், சத்து மாவு தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
உதவி வேளாண்மை அலுவலர் கண்ணபிரான், அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர்கள் செல்வபாண்டியன், வீரபாண்டியன், உதவித் தொழில்நுட்ப மேலாளர்கள் பாஸ்கர், பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



http://www.dinamani.com/edition_vellore/thiruvannamalai/2015/09/17/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/article3032017.ece

No comments:

Post a Comment