Thursday, September 17, 2015

"மீன் வளர்க்கும் குத்தகை: ஏலம் எடுக்க விண்ணப்பிக்கலாம்'


தேனி மாவட்டத்தில் மீன் வளர்க்கும் குத்தகை உரிமையை ஏலம் எடுக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் நா. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

   இது குறித்து, ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்தில் உள்ள 11 நீர்ப்பாசன கண்மாய்களில் தீவிர உள்நாட்டு மீன் வளர்ப்பு மற்றும் விற்பனை திட்டத்தின் கீழ், மீன் வளர்க்கும் குத்தகை உரிமை மீன் வளத்துறை மூலம் 2015-16 முதல் 2017-18 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தப் புள்ளி மூலம் 8.10.2015 ஆம் தேதியில் முடிவு செய்யப்பட உள்ளது.
   எனவே, ஆர்வமுள்ள மீன் வளர்ப்போர் உரிய ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் மற்றும் குத்தகை நிபந்தனைகளை 21.9.2015 முதல் 7.10.2015 வரை வைகை அணையில் செயல்படும், தேனி மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ரூ. 300 விண்ணப்பத் தொகை செலுத்தி பெற்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

http://www.dinamani.com/edition_madurai/theni/2015/09/17/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE/article3032164.ece

No comments:

Post a Comment