Thursday, September 17, 2015

வேளாண் இயந்திரத்துக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்


வேளாண் இயந்திரம், கருவிகளுக்கு மானியம் பெற விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நிகழாண்டில் வேளாண் பொறியியல் துறை மூலம் நெல் நடவு இயந்திரம், விதைக்கும் கருவி வாங்க மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி, நெல் நடவு இயந்திரத்துக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.94 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையிலும், இதர விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படும்.
விதைக்கும் கருவிக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.44 ஆயிரம் வரையிலும், இதர விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் வரையிலும் மானியம் வழங்கப்படும்.
இத் திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது பெயர், முகவரி, சர்வே எண், சிட்டா அடங்கல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி ஆகிய வட்டார விவசாயிகள், உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, 311, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, (கிருஷ்ணகிரி மகளிர் காவல் நிலையம் அருகில்), கிருஷ்ணகிரி என்ற முகவரியிலும், ஒசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள், உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, ராயக்கோட்டை சாலை, சானசந்திரம், ஒசூர் என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


http://www.dinamani.com/edition_dharmapuri/krishnagiri/2015/09/17/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/article3032870.ece

No comments:

Post a Comment