பரமக்குடி, : பருத்தி, மிளகாய்க்கு கூடுதல் விலை கிடைக்க மேற்கொள்ள
வேண்டிய செய்நேர்த்தி தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண்துறை விவசாயிகளுக்கு ஆலோசனை
வழங்கியுள்ளது. பருத்தி, மிளகாய் போன்றவற்றை அறுவடை செய்து அப்படியே விற்பனைக்கு கொண்டு
செல்வதால் விலை குறைவாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சில செய்நேர்த்தி தொழில்நுட்பங்களை
மேற்கொள்வதின் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும். பருத்தியை பொறுத்தளவில்
சுத்தத்தன்மை, நிறம், மென்மை, குறைவான ஈரம் ஆகிய நான்கும் விலையை தீர்மானிக்கும். எனவே
நன்கு மலர்ந்த பருத்தியை மட்டும் செடியில் இருந்து பறிக்க வேண்டும். மூன்று அல்லது
நான்கு தினங்களுக்கு ஒருமுறை பருத்தியை பறிக்கலாம். காலை நேரங்களில் பறிப்பது சிறந்தது.
அப்போதுதான் காய்ந்த இலை, சருகுகள் பருத்தியில் ஒட்டாது. சேகரித்த பருத்தியை நிழல்,
மணல் பரப்பிய களங்களில் காயப்போட வேண்டும். நேரடி வெயிலில் உலர வைத்தால் பஞ்சின்நிறம்
குறைந்துவிடுவதுடன் மென்மைத்தன்மையும் பாதிக்கும்.
பின்பு நன்குஉலர்த்தி, சருகுகள், பூச்சிநோய் தாக்கியது, கொட்டைகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும். தொடர்ந்து காற்றோட்டமான அறைகளில் மணல் பரப்பிய தரையில் சேமிக்க வேண்டும். பருத்தியை ரகம்வாரியாக தனித்தனியாகச் சேமிப்பது நல்லது.
மிளகாய்: மிளகாயில் பூஞ்சாணக்கொல்லிகள் தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். மிளகாய் செடியில் பழங்கள் முழுவதும் சிவப்புநிறமாக மாறியவுடன் பறிக்கலாம். பழங்களைப் பறித்த அன்றே காயப்போட வேண்டும். மணல் பரப்பிய களங்கள் இதற்கு ஏற்றது. மிதமான வெப்பநிலையில் காலையிலும், மாலையிலும் நான்கு நாட்கள் காயப்போட வேண்டும். இரவில் மிளகா பனியால் பாதிக்கப்படாமல் இருக்க பழங்கள் மீது இலேசான படுதாவைப்போட்டு மூடி வைக்கலாம். மிளகாய்வற்றல் சிவப்புநிறமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தவறான சேமிப்புமுறையில் வற்றல் கருப்பு நிறமாக மாறினால் நல்லவிலைக்கு விற்கமுடியாது.
மிளகாய் வற்றலை சந்தைக்கு கொண்டு செல்லும்போது சாக்கு அமுக்கக்கூடாது. இதனால் வத்தல் உடைந்து எதிர்பார்த்த விலை கிடைக்காமல் போகலாம் என்று வேளாண்மைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=486861&cat=504
No comments:
Post a Comment