தரமான விதையை தேர்வு செய்வது
எப்படி? என்பது குறித்து கோவை விதை சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு துறை துணை இயக்குனர்
பழனிசாமி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
பயிற்சி வகுப்பு
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய வேளாண்மை
தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) சார்பில் தரமான விதை உற்பத்தி மற்றும் விதை சான்றளிப்பு
முறை குறித்த பயிற்சி வகுப்பு ஒன்றிய கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய குழு
தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். அட்மா திட்ட தலைவர் ரவிசுந்தரம் முன்னிலை வகித்தார்.
முன்னதாக வேளாண்மைத்துறை அதிகாரி சுமியா பானு வரவேற்று பேசினார்.
இதில் கோவை விதை சான்று மற்றும்
அங்கக சான்றளிப்பு துறை துணை இயக்குனர் பழனிசாமி பயிற்சி அளித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
தரமான விதை என்பது பாரம்பரிய
குணங்களில் இருந்து சிறிதும் குறையாமல் இருக்க வேண்டும். அதிகப்படியான முளைப்பு திறன்,
அளவான ஈரப்பதம், இனத்தூய்மை, புறத்தூய்மை, பூச்சி நோய் தாக்குதல் இல்லாமை ஆகிய குணாதிசயங்களை
கொண்டதாக இருக்க வேண்டும்.
தரமான விதை உற்பத்தி
விதை தரத்திற்கு தமிழ்நாடு அரசு
விதை சான்றுத்துறை உத்தரவாத சான்று வழங்குகிறது. விதை என்ற அடிப்படை இடுபொருளை தேர்ந்தெடுக்கும்
போது சிறிது கவன குறைவு ஏற்பட்டாலும் மொத்த விளைச்சலும் பாதிக்கப்படும். விதை பண்ணைகளை
விதை சான்றுத்துறை அலுவலர்கள் பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்து உற்பத்தி செய்யப்படும்
விதை குவியலுக்கு நீலநிற அட்டையில் சான்று வழங்கப்படுகிறது.
இதில் பயிர் ரகம், உற்பத்தி தேதி,
எடை அளவு, முளைப்புத்திறன், காலாவதி தேதி போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
இதை விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். விதை விதைத்தல், பயிர் வளர்ப்பு, பயிர் பாதுகாப்பு,
வேளாண்மைத்துறை பரிந்துரைப்படி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயிகள்
இதில் விதை சான்றிளிப்பு வேளாண்மை
உதவி இயக்குனர் சைலஸ், விதை பகுப்பாய்வு வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடாசலம், விதைசான்று
அலுவலர் மகேஸ்வரன், உதவி வேளாண்மை அலுவலர் கந்தசாமி, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப
மேலாளர் நாகநந்தினி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பாரதிராஜா, லோகநாயகி, கோவை தமிழ்நாடு
வேளாண்மை பல்கலைக்கழக மாணவ–மாணவிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment