Tuesday, September 15, 2015

வட்டார வேளாண் சேவை மையங்களுக்கு வேளாண் இயந்திரங்கள் அளிப்பு


புதுகை மாவட்டத்தில் வட்டார வேளாண் சேவை மையங்களுக்கு ரூ. 52.5லட்சம் மதிப்பில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் வட்டார வேளாண் சேவை மையத்துக்கு வேளாண் இயந்திரங்களை வழங்கிப் பேசியது:
வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் மூலம் தமிழக அரசு விவசாயிகளுக்கு தேவையான வேளாண் இயந்திரங்களை நியாயமான வாடகைக்கு வழங்கவும், இயந்திரப் பழுது நீக்கவும், தனியார் பங்களிப்புடன் சேவை மையங்கள் தொடங்க ஆணையிட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் முதல்கட்டமாக விராலிமலை மற்றும் பொன்னமராவதி வட்டாரங்களில் வேளாண் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், விவசாயிகள் குழுக்கள், தொழில்முனைவோரது பங்களிப்பு தொகையாக ரூ.15 லட்சமும், அரசு மானிய உதவித்தொகை ரூ. 10  லட்சம் என மொத்தம் ரூ. 25 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. விராலிமலை வட்டார வேளாண் சேவை மையத்தில் டிராக்டர்கள்சுழல் கலப்பைகள், 9 கொலு கலப்பைகள், பவர் டில்லர்கள் உள்ளிட்ட ரூ.26.57 லட்சம் மதிப்பில் 13 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பொன்னமராவதி வட்டார வேளாண் சேவை மையத்தில் டிராக்டர்கள், பவர் டில்லர், சுழல் கலப்பை, விதை மற்றும் உரம் இடும் கருவி, 9 கொலு கலப்பை, கதிரடிக்கும் இயந்திரம் உள்ளிட்ட ரூ. 25.93  லட்சத்தில் 12 கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
விராலிமலை வட்டார வேளாண் கருவிகள் தேவைக்கு செல்வராஜ்- 94439-51397-ம், பொன்னமராவதி வட்டார வேளாண் கருவிகள் தேவைக்கு சிதம்பரம்- 99529-60574 ஆகியோர் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.மாரிமுத்து, வேளாண் பொறியியல் துறை பொறியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

http://www.dinamani.com/edition_trichy/pudukottai/2015/09/16/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/article3030766.ece

No comments:

Post a Comment