மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (செப்.18) நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காலை 11 மணிக்கு தொடங்கும் இக் கூட்டத்தில் ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையில், வேளாண்மை தொடர்புடைய அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்பர். வேளாண்மை சம்பந்தமான தனிநபர் பிரச்னையாக இருப்பின் கோரிக்கை மனுக்களாக அளிக்கலாம். பொதுப் பிரச்னையாக இருந்தால், கூட்டத்தின்போது தெரிவிக்கலாம்.
No comments:
Post a Comment