Tuesday, September 22, 2015

தமிழக இளைஞர்களுக்கு "சூரிய மித்ரா' பயிற்சி




திண்டுக்கல் : இந்தியாவில் 2022 க்குள் "சோலார்' போன்ற புதுப்பிக்க வல்ல எரிசக்தி மூலம் ஒரு லட்சம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தனியாருடன் இணைந்து நாடு முழுவதும் "சோலார்' மின் உற்பத்தி மையங்கள் அமைக்கும் பணி நடக்கின்றன. இதன்மூலம் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2015-16 க்குள் பிளஸ் 2, ஐ.டி.ஐ.,- டிப்ளமோ முடித்த 50 ஆயிரம் இளைஞர்களுக்கு "சோலார்' உபகரணங்களை இணைத்தல், பழுதுநீக்குதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் இப்பயிற்சியை அளிக்க காந்திகிராம பல்கலையை தேசிய சோலார் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. முதற்கட்டமாக ரூ.12.84 லட்சம் தொகை ஒதுக்கியுள்ளது.
காந்திகிராம பல்கலை எரிசக்தி மையத்தலைவர் கிருபாகரன் கூறியதாவது: ஒவ்வொரு முறையும் 30 மாணவர்களுக்கு, மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். தங்குமிடம், உணவு இலவசம். பயிற்சி முடித்தவுடன் பசுமை வேலைவாய்ப்பு திறன் குழுமம் சான்றிதழ் வழங்கும். பெண்கள், கிராமப்புற, எஸ்.டி.,-எஸ்.டி., பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பம் அடிப்படையில் பயிற்சி தேதி, இடம் அறிவிக்கப்படும். விரும்புவோர் தீதீதீ.ணூதணூச்டூதணடிதி.ச்ஞி.டிண என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், என்றார்.http://www.dinamalar.com/district_detail.asp?id=1347327

No comments:

Post a Comment