Thursday, September 3, 2015

பயறு வகை சாகுபடி செய்ய வேளாண் துறை மானியம்


பழனி சுற்று வட்டாரப் பகுதியில் பயறு வகைகளை சாகுபடி செய்ய வேளாண் துறை மானியம் அறிவித்துள்ளது. 
   இது குறித்து, வேளாண் உதவி இயக்குநர் சுருளியப்பன் தெரிவித்துள்ளதாவது: பழனி வட்டாரத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பயறு வகை விதைகள் கிலோ ரூ. 25 வீதம் 5 ஆயிரம் கிலோ வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திடல் அமைத்திட, கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
  மேலும், பயறு வகை தொகுப்பு திடல், ஒரு ஏக்கருக்கு வேண்டிய விதைகள், உயிர் உரம், நுண் உரங்கள், களைக்கொல்லி ஆகியன வாங்க சுமார் ரூ. 4 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. முதல் பயிராக மக்காச்சோளமும், இரண்டாம் பயிராக உளுந்து வகை பயறு சாகுபடி செய்யவும், 100 விவசாயிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
  இவர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 4 ஆயிரம் என இருவகைப் பயிருக்கு ரூ. 8 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. தேவைப்படும் விவசாயிகள், வேளாண் அலுவலர் சின்னமாணிக்கத்தை 91505-78262 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.




http://www.dinamani.com/edition_madurai/dindigul/2015/09/04/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3/article3009350.ece

No comments:

Post a Comment