தர்மபுரி மாவட்ட
விவசாயிகள் வேளாண் இடுபொருட்களை மானிய விலையில் பெறலாம் என்று தர்மபுரி மாவட்ட வேளாண்
இணை இயக் குனர் (பொறுப்பு) வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மானிய திட்டங்கள்
தர்மபுரி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 853.1 மி.மீட்டர் ஆகும். இதில் ஆகஸ்டு மாதம் வரை பெய்ய வேண்டிய சராசரி மழையளவான 385.2 மி.மீட்டருக்கு கூடுதலாக இதுவரை 492 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. இந்த மழையை பயன்படுத்தி நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்து மற்றும் பருத்தி பயிர் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தென்மேற்கு பருவமழை முழுமையாக பெய்யாமல் காலதாமதமாக ஆகஸ்டு மாதத்தில் பெய்துள்ளது.
இதன்காரணமாக விவசாயிகள் அதிக கால அளவு கொண்ட பயிர்களை சாகுபடி செய்வதை தவிர்த்து குறுகிய கால பயிர்களான சாமை, ராகி, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை பயிரிட ஆலோசனை வழங்கப்படுகிறது. இவ்வாறு சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு விவசாய கருவிகள், மானிய விலையில் விதைகள், உற்பத்தி மற்றும் வினியோக மானியம் உள்ளிட்ட இனங்களை செயல்படுத்த ரூ.11 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு விவசாயிகளுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விதைகள் இருப்பு
விவசாயிகளுக்கு தேவையான தரமான சான்று பெற்ற விதைகள் முறையே நெல்லில் 103 மெட்ரிக் டன்கள், சிறுதானியங்களில் 6.8 மெட்ரிக் டன்கள், பயிறுவகைகளில் 151 மெட்ரிக் டன்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களில் 14.8 மெட்ரிக் டன்கள் அனைத்து விரிவாக்க மையங்களிலும் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. மேலும் உயிர் உரங் கள், நுண்ணூட்ட சத்துக்கள், உயிரியல் பூச்சி மற்றும் பூஞ்சான கொல்லிகள் போதிய அளவு விதைகள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றி அறியவும் விவசாய இடுபொருட்களை மானிய விலையில் பெறவும் தங்கள் பகுதிகளுக்கு வரும் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு அந்தந்த வட்டார வேளாண்மை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment