Monday, September 7, 2015

தேனியில் ஆடு வளர்ப்பு பயிற்சி



தேனி உழவர் பயிற்சி மையத்தில், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு குறித்து, செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை விவசாயிகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  இது குறித்து, தேனி உழவர் பயிற்சி மைய உதவிப் பேராசிரியர் அ. செந்தில்குமார் கூறியது: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில், தேனியில் மதுரை சாலை, சார்நிலை கருவூலம் எதிரே உள்ள உழவர் பயிற்சி மையத்தில் செப்டம்பர் 7 முதல் 9 ஆம் தேதி வரை வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  பயிற்சியில் சேர விரும்புவோர், 94431-08832, 89731-86944 ஆகிய எண்களில்  தொடர்பு கொண்டு, தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.


http://www.dinamani.com/edition_madurai/theni/2015/09/06/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/article3013041.ece

No comments:

Post a Comment