Monday, September 21, 2015

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்

நாமக்கல்: 'கால்நடை மருத்துவமனை வளாகத்தில், நாட்டுக்கோழி வளர்ப்பில், மூலிகை மருத்துவத்தின் மகிமை என்ற தலைப்பில், நாளை (செப்., 22) பயிற்சி முகாம் நடக்கிறது' என, ஆராய்ச்சி மையத் தலைவர் கோபாலகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் கால்நடை மருத்துவமனை வளாகத்தில், கோழிகளுக்கான மரபு சார் மருத்துவ ஆராய்ச்சி மையம் சார்பில், பண்ணையாளர்களுக்கான நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் முக்கியத்துவம் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம், நாளை (செப்., 22) மதியம், 2 மணிக்கு நடக்கிறது. பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment