Monday, September 21, 2015

வேளாண் விதைப்பண்ணையில் புதிய நெல் ரகங்கள் சாகுபடி



மேட்டூர்: மேட்டூர் வேளாண் விதைப்பண்ணையில், நடப்பாண்டு புதிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு, உற்பத்தி செய்யப்படும் நெல் விதைகள், வரும் ஆண்டில் விவசாயிகள் வினியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேலம் மாவட்டம், மேட்டூர் மற்றும் டேனீஸ்பேட்டையில் வேளாண் விதைப்பண்ணை உள்ளது. மேட்டூர் விதைப்பண்ணை, ஆண்டுதோறும், 40 ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். மேட்டூர் விதைப்பண்ணையில், 135 நாட்கள் வளரும், பொன்னிநெல், கோ.ஆர்., 50 மற்றும், 120 நாட்கள் வளரும், .டி.டி.,45, ஆகிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்படும். வழக்கமாக, சாகுபடி செய்யப்படும் நெற்பயிரை விட, கூடுதல் மகசூல் தரும் புதிய நெல் ரகங்களை வேளாண் பல்கலை கழகம் அறிமுகம் செய்துள்ளது. இதனால், மேட்டூர் வேளாண் விதைப்பண்ணையில், நடப்பாண்டு, வழக்கமான சாகுபடி செய்யப்படும் நெல் ரகங்களுக்கு பதிலாக, 135 நாட்கள் வளரும், .டி.டி.,49, 130 நாட்கள் வளரும் டி.ஆர்.ஒய்.,3, மற்றும் 120 நாட்கள் வளரும், கே.ஆர்.,51 ஆகிய மூன்று புதிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மேட்டூர் விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் நெல் ரகங்கள், வரும் ஆண்டு விவசாயிகள் சாகுபடி செய்வதற்காக வினியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment