Monday, September 21, 2015

கால்நடை பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்



.பரமத்தி: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே மலைப்பட்டியில் சிறப்பு கால் நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடந்தது. பஞ்., தலைவர் பேரானந்தன் தலைமைவகித்தார். வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு நோய் தடுப்பூசி, பசு மற்றும் எரு மைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. குடற் புழுநீக்கல், கருவூட்டல், மலடு நீக்கல், சினை பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டது. டாக்டர்கள் சுமதி, ராஜேந்திரன், நாகராஜன் ஆகியோர் சிகிச்சையளித்தனர். இங்கு, 1,064 கால்நடைகளுக்கு இலவச சிகிச்சையளிக்கப்பட்டது. பெரியதிருமங்கலத்தில் நடந்த கால்நடை முகாமில் உதவி இயக்குநர் ராஜேந்திரன் தலைமைவகித்தார். டாக்டர்கள் கலைவாணி மோகன்ராஜ், கால்நடை ஆய்வாளர் ஜானகி ஆகியோர், 200 பசுமாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். சிறந்த கலப்பின கிடேரிகளை வளர்த்த, 7 பேருக்கு பரி சு கள் வழங்கப்பட்டன. 

No comments:

Post a Comment