தோட்டக்கலைத் துறை மூலம் வேளாண் பண்ணைக் கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள்
சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் நவீன வேளாண் பண்ணைக் கருவிகள்
மானிய விலையில் வழங்கப்படுகின்றன. ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் மூலம்
தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் 25 முதல் 35% மானியத்தில் 8 குதிரை சக்தி முதல் 20
குதிரை சக்தி கொண்ட மின் டிராக்டர்களும், 8 குதிரை சக்திக்கும் குறைவான சக்தி கொண்ட
பவர் டில்லர்கள் ரூ. 40 ஆயிரம் மானியத்திலும் வழங்கப்படுகிறது. பண்ணைக்கருவி தேவைப்படும்
விவசாயிகள் தங்களது நிலத்தின் கணினிச் சிட்டா, தோட்டக்கலை பயிர் செய்ததற்கான அடங்கல்,
குடும்ப அட்டை நகல், வரைபடம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 ஆகிய ஆவணங்களுடன் தங்களது
பகுதி வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை அணுகி முன்பதிவு
செய்து முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம்.
http://www.dinamani.com/edition_trichy/pudukottai/2015/09/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/article3034372.ece
No comments:
Post a Comment