Thursday, September 17, 2015

25இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்


திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.18) நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் செப்.25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, செப்டம்பர் மாதத்துக்கான கூட்டம் இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நிர்வாக காரணங்களால், இக்கூட்டம் இம்மாதம் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/edition_thirunelveli/thirunelveli/2015/09/17/25%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/article3032992.ece

No comments:

Post a Comment