Tuesday, September 22, 2015

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு


தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது: 
வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. குறிப்பாக, ஓரிரு மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பதிவானது. 
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அதிகபட்சமாக 130 மி.மீட்டர் மழை பதிவானது. அதற்கு அடுத்தபடியாக, அரக்கோணத்தில் 90 மி.மீ, அதிராம்பட்டினத்தில் 60 மி.மீ, உளுந்தூர்பேட்டை, சென்னை டி.ஜி.பி. அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கடலூர் மாவட்டம் கே.எம்.கோயில் ஆகிய இடங்களில் 50 மி.மீட்டர் மழை பதிவாகியது.
பலத்த மழைக்கு வாய்ப்பு: வட கடலோர தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக, வியாழக்கிழமையும் (செப்.24), வெள்ளிக்கிழமையும் (செப்.25) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமையன்று ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரியாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

http://www.dinamani.com/tamilnadu/2015/09/22/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/article3040390.ece



No comments:

Post a Comment