Tuesday, September 22, 2015

சூரிய மின் உற்பத்தியில் வெளிநாட்டு தொழில்நுட்பங்கள்



சூரிய மின் சக்தியில் வெளிநாட்டுத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார்.
 சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, மரபு சாரா எரிசக்தி ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படுமா என்ற கேள்வியை ஆர்.சரத்குமார் எழுப்பினார். இதைத் தொடர்ந்து, எழுப்பப்பட்ட துணைக் கேள்விகளுக்கும் அமைச்சர் விஸ்வநாதன் அளித்த பதில்:
 சூரிய மின்சக்தி போன்ற மரபு சாரா எரிசக்திக்கென தனியாக ஆராய்ச்சி மையங்களை அமைக்கும் திட்டம் ஏதுமில்லை. மரபு சாரா எரிசக்தித் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை சீனா, கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், ஜெர்மனி ஆகிய நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நாடுகள் அதிக அளவில் தரமான சூரிய மின் தகடுகளை உற்பத்தி செய்து கொடுக்கின்றன.
 அந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளையும், தொழில்நுட்பங்களையும் தமிழகத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம். எனவே, தனியாக ஆர்யாச்சி மையம் அமைக்க வேண்டியதில்லை.
 தமிழகம் இப்போது காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. சூரிய மின் சக்தி உற்பத்தியிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் முதலிடத்தைப் பிடிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.


No comments:

Post a Comment