திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுட்ட செய்திக் குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற செப்டம்பர்
25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முற்பகல் 11 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்
கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் இந்த மாவட்டத்தில் உள்ள வேளாண்மைத் துறை,
தோட்டக்கலைத் துறை, வருவாய்த் துறை, மின்வாரியம், கூட்டுறவுத் துறை, பொதுப்பணித் துறை,
வேளாண்மை பொறியியல் துறை, மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண் விற்பனை,
வணிகத் துறை, இதர வேளாண் சார்ந்த துறை
அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகளின் குறைகளுக்கு தீர்வு
காணவுள்ளனர். எனவே இந்த மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் மேற்படி கூட்டத்தில் கலந்து
கொண்டு பயன் பெற வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment