வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய
பணிகள் குறித்த முன்னேற்பாடு கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியர்
பி.சங்கர் பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக் காலத்தில்
ஏற்படும் பேரிடர் தொடர்பாக விவரங்களைத் தெரிவிக்க ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு
அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்பு எண்கள் 0424-2260211, எஸ்.எம்.எஸ்., தெரிவிக்க
78069 17007 என்ற எண்ணை பயன்படுத்தலாம். 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும்
பேரிடர் விவரங்களைத் தெரிவிக்கலாம். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் எடுக்கப்பட
வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து, அந்தந்த அதிகாரிகள் தங்கள் எல்லைக்கு
உள்பட்ட அனைத்து துறை அலுவலர்களைக் கொண்டு எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள்
குறித்து உடனடியாக கூட்டம் ஏற்பாடு செய்து நடத்த வேண்டும்.
வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, மின்சார
வாரியம், வளர்ச்சித் துறை அலுவலர்கள் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் பேரிடர்களை
உடனுக்குடன் ஆட்சியர், சார்பு துறைகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு இரவில் சுழற்சி முறையில்
பணிபுரிய பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.
மேலும், பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது
என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சிகளை, பொதுமக்கள் கூடும் இடங்களில் மேற்கொள்ள வேண்டும்
என்றார்.
இக்கூட்டத்தில், அனைத்துத் துறை அதிகரிகள்
பங்கேற்றனர்.
http://www.dinamani.com/edition_coimbatore/erode/2015/09/19/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D/article3036019.ece
No comments:
Post a Comment