Monday, September 21, 2015

கறவை மாடு, ஆடுகளுக்கு தீவன தயாரிப்பு: நாளை இலவச பயிற்சி



நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.22) கறவை மாடு, ஆடுகளுக்கு சொந்தமாகத் தீவனம் தயாரிப்பது குறித்த ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் பி.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல் - மோகனூர் சாலை கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கறவைமாடு, வெள்ளாடு, செம்மறியாடுகளுக்கு சொந்தமாகத் தீவனம் தயாரிக்கும் முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இப் பயிற்சி முகாமில் கறவைமாடு, வெள்ளாடு, செம்மறியாடுகளுக்கான தீவன மேலாண்மை, தீவன அளவுகள், சொந்தமாக தீவனம் தயாரிக்கும் முறைகள் குறித்து விரிவாக பயிற்சியளிக்கப்படுகிறது.
இம் முகாமில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment