Friday, September 18, 2015

விவசாயிகளுக்கு பயிறு அறுவடைக்குப்பின் செய்நேர்த்தி பயிற்சி



புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மைத் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இணைந்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாமை அன்னவாசல் வட்டாரத்தில் அண்மையில் நடத்தின.
மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ், பயிறு அறுவடைக்குப்பின் செய்நேர்த்தி மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி மாவட்ட அளவில் 80 விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.
இலுப்பூரில், துணை இயக்குநர் முகம்மது அப்துல் நசீர் (வணிகம்) தலைமையில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஒரு நாளில் 40 விவசாயிகள் வீதம் 2 நாள்களில் 80 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியில், விவசாயிகளுக்கு உளுந்தம் கஞ்சி தயாரித்தல் மற்றும் வேகவைத்த மதிப்பு கூட்டிய பச்சைபயறு தயாரிப்பு முறையை வம்பன் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் கீதா, மதியழகன் ஆகியோர் செயல்விளக்கம் அளித்தனர்.


http://www.dinamani.com/edition_trichy/pudukottai/2015/09/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F/article3035815.ece

No comments:

Post a Comment