Friday, September 18, 2015

தஞ்சையில் செப். 25-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்



தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25-ஆம் தேதி ஆட்சியரக கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
கூட்டத்தில், விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த திட்ட விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அனைவரும் விவசாயம் தொடர்புடைய கருத்துகளை மட்டும் தெரிவிக்கலாம்.
கூட்டத்தில் கருத்து தெரிவிக்க விரும்புவோர் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை, ஆட்சியர் அலுவலக கணினியிóல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு வட்டாரத்திற்கும் பதிவு செய்துள்ள விவசாயிகளில் முதல் இரண்டு பேர் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க அனுமதிக்கப்படுவர்.
மேலும், விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து, ஒப்புதல் பெற்ற பின்னரே மனுக்களை அளிக்க வேண்டும்
என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  

No comments:

Post a Comment