Thursday, September 3, 2015

எந்திரம் மூலம் நெல் நடவு குறித்த விழிப்புணர்வு முகாம்



பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் தேசிய வேளாண்வளர்ச்சி திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் எந்திரம் மூலம் நெல் நடவு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் வரவேற்றார். மாரியப்பன் அம்பலம் முன்னிலை வகித்தார். எந்திரம் மூலம் நெல் நடவு முறைகள் குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பிரபாகரன் விளக்கம் அளித்து பேசினார். முகாமில் கண்டியாநத்தம் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் அருளானந்தம், மலர்விழி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் குமாரசாமி நன்றி கூறினார்.


http://www.dailythanthi.com/News/Districts/Pudukottai/2015/09/04025503/Awareness-camp-on-rice-planting-machine.vpf

No comments:

Post a Comment