Thursday, September 17, 2015

வீட்டுத் தோட்டம் அமைக்க பயிற்சி



விழுந்தயம்பலத்தில் கிரீன் அக்ரி கிளப் சார்பில், இயற்கை முறையில் வீட்டுத் தோட்டம் அமைத்து பயிர்கள் வளர்ப்பு குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு விழுந்தயம்பலம் புனித அந்தோனியார் ஆலய பங்கு அருள்பணியாளர் சேகர் மைக்கேல் தலைமை வகித்தார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மரிய புஷ்பம் முன்னிலை வகித்தார்.
பயிர்கள் வளர்ப்பு குறித்து வேளாண் அறிஞர் ராஜகுமார் செய்முறை பயிற்சி அளித்தார். இதில் கீரை வகைகள், பயிர் வகைகள், காய், கனி உள்ளிட்டவற்றை வளர்த்து விளைச்சலை பெருக்குவது குறித்து அவர் பேசினார்.
மேலும் வீட்டுக் கழிவுகளை உரமாக்குதல், கால்நடை கழிவுகளை உரமாக்குதல், நஞ்சில்லா முறையில் காய்கனிகளுக்கு மருந்து தெளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பின்பு விமலா குளோரி, ரெக்ஸிலின், சிசிலி ஆகியோர் தலைமையில் வீட்டுத் தோட்டங்கள் அமைக்க குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
முகாமில் விழுந்தயம்பலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆப்பிகோடு, குஞ்சாகோடு, தொழிக்கோடு, தொலையாவட்டம், கிள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பெண்கள் பங்கேற்றனர்.

http://www.dinamani.com/edition_thirunelveli/kanyakumari/2015/09/17/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF/article3031878.ece

No comments:

Post a Comment