தூத்துக்குடி,
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், தமிழக அரசு நிதியுதவியுடன "மீன் கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் பயிற்சி" மீன்வளச் சூழலியல் துறையில் 3 நாட்கள் நடந்தது. இந்த பயிற்சியின் நோக்கமானது மீன் கழிவுகளை மறுசுழற்சி செய்து மதிப்பூட்டப்பட்ட உரமாக மாற்றுவதாகும். தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள அரசு சாரா அமைப்புகளிலிருந்து 25 பெண் பயிற்சியாளர்கள் இந்த பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பயிற்சியில் உரம் தயாரிப்பது பற்றிய பல்வேறு வழிமுறைகளும் அதன் பயன்பாடுகளும் எடுத்துரைக்கப்பட்டது. மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்காக நெல்லை மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் சுகுமார் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைக் கழிவு மற்றும் இதர தொழிற்சாலைக் கழிவுகளான மரத்தூள், தேங்காய் நார்க் கழிவு மற்றும் கரும்புச்சக்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும், அவற்றை உரமாக மாற்றுவதற்கான வழிமுறைகளை பற்றியும் பேசினார். "மீன் கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் – பயிற்சி கையேடு" வெளியிடப்பட்டது.
பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மாதிரி உரப்பை வழங்கப்பட்டது. மீன்வளச் சூழலியல் துறைத்தலைவர் சீனிவாசன், ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment