Tuesday, September 15, 2015

மீன்வளத்துறை அறிவிப்புகள்: நெல்லையில் நவீன மீன்வள மாதிரி கிராமம்



சட்டப் பேரவையில் நேற்று மீன் வளத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்துக்கு பிறகு அமைச்சர் ஜெயபால் வெளியிட்ட அறிவிப்புகள்: 
*
மீன்கள் அதிகமாக கிடைக்கும் இடங்கள், வானிலை மற்றும் கடல்நிலை குறித்த விவரங்கள், ஆபத்துக்காலங்களில் அபாய எச்சரிக்கை உள்ளிட்ட தகவல்களை  மீனவர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள வசதியாக 10 மீன் இறங்கு தளங்களில் மின்னணு காட்சிப் பலகைகள் அமைக்கப்படும்.
*
மீன்பிடிக்கும் போது ஆபத்து கால எச்சரிக்கை விடுக்கும் கருவிகள் மானிய விலையில் 1600 மீன்பிடி கலன்களுக்கு வழங்கப்படும். 
*
அண்மைக் கடல் மற்றும் கழிமுகப்பகுதிகளில் மிதவைக்கூடுகளில் மீன் வளர்ப்பு தொழில் 10 இடங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும். 
*
உள்நாட்டு மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போருக்கு 50 சதவீத மானியத்தில் கண்ணாடி நாரிழை பரிசல்கள் வழங்கப்படும். 
*
திருநெல்வேலி மாவட்டத்தில் நவீன மீன்வள மாதிரி கிராமம் உருவாக்கப்படும். 
*
சென்னை மெரினா கடற்கரையில் கடல் உயிரின மீன் காட்சியகம் அமைக்கப்படும். 
*
மீன் பிடிக்கப்பட்டதில் இருந்து நுகர்வோருக்கு சென்று சேரும்  வரை தொடர் சங்கிலி குளிர்காப்பு வசதிகளுடன் 19 மாவட்டங்களில் மீன் விற்பனை மையங்கள் நவீனப்படுத்தப்படும். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=167409


No comments:

Post a Comment