புதுவையில் வேளாண்துறை தோட்டக்கலை பிரிவு சார்பில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் திங்கள்கிழமைத் தொடங்கியது.
தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் புதுவையில்
இரண்டு நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்படி, புதுவை தாவரவியல் தோட்டத்தில்
பயிற்சி முகாம் தொடங்கியது.
தோட்டக்கலைப் பிரிவு வேளாண் துணை இயக்குநர் இரா.சிவபெருமான்
பங்கேற்று, தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். கூடுதல் வேளாண் இயக்குநர்
சீ.ஜெயசங்கர் பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.
தேனீ வளர்ப்பு பயிற்சியாளர்கள் ஜாஸ்பர், நடேசன் ஆகியோர்
தேனீ வளர்ப்பு முறைகள், பயன்கள் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சியளித்தனர்.
பயிற்சியில், விவசாயிகள், மகளிர் குழுவினர், அண்ணாமலை
பல்கலை. வேளாண் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். புதுவை வேளாண் அலுவலர்கள் பயிற்சி
ஏற்பாடுகளை செய்திருந்தனர். தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் இவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment