Tuesday, September 22, 2015

விவசாயிகளின் நிவாரணத்துக்கு நிதி உதவி அளித்த 8 வயது சிறுமி தேவேந்திர பட்னாவிஸ் பாராட்டு



மும்பை, 
விவசாயிகளின் நிவாரணத்துக்காக நாக்பூரை சேர்ந்த 8 வயது சிறுமி நிதி உதவி அளித்துள்ளார். அவருக்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பாராட்டு தெரிவித்தார்.
8 வயது சிறுமி
நாக்பூரை சேர்ந்த 8 வயது சிறுமி ரஷிகா ஜோஷி, விவசாயிகளின் பிரச்சினையை கருத்தில் கொண்டு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசை நேற்று மும்பையில் சந்தித்து நிவாரண உதவி அளித்தார். இதற்காக வங்கியில் தான் சேமித்து வைத்திருந்த சொற்ப அளவு பணத்தை அவர் அளித்தார். இருந்தாலும், சிறுவயதிலேயே சமூக சேவையின் மீது அதிக அக்கறை கொண்டுள்ள சிறுமி ரஷிகா ஜோஷிக்கு பாராட்டு மழை குவிகிறது.
அவருக்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘ரஷிகா ஜோஷி தன்னுடைய வங்கி சேமிப்பு முழுவதையும் விவசாயிகளுக்காக கொடுத்துள்ளார். அவருடைய இந்த திடீர் பங்களிப்பால் நான் உருகிப்போய்விட்டேன்’’ என்றார். இதுபற்றி அவருடைய தந்தை மனோஜ் ஜோஷி நிருபர்களிடம் கூறியதாவது:–
பிரமித்து போய்விட்டேன்
என்னுடைய மகள் ரஷிகா ஜோஷி நடிகர் அமீர்கானின் தீவிர ரசிகை. ஒரு முறை அவர் முதல்–மந்திரியை சந்தித்து, விவசாயிகளின் நிவாரணத்துக்காக காசோலை வழங்கினார். இந்த படத்தை செய்தித்தாள்களின் வாயிலாக பார்த்த என் மகள், நானும் இதுபோல் விவசாயிகளுக்கு உதவினால், என்னுடைய படமும் இவ்வாறு வருமா? என்று கேட்டாள்.
இதற்கு நான் சாதகமான பதில் அளித்ததை தொடர்ந்து, தன்னுடைய வங்கி சேமிப்பு கணக்கில் உள்ள பணம் முழுவதையும் விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்துவிட்டாள். மேலும், அவள் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்த போது நான் ஊரில் இல்லை. என்னுடைய அண்டை வீட்டார், அவளை அழைத்து வந்திருக்கிறார்கள். ஆனாலும், அவளுக்கு முதல்–மந்திரி தெரிவித்த பாராட்டை பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.
இவ்வாறு மனோஜ் ஜோஷி தெரிவித்தார்.
  

No comments:

Post a Comment