Tuesday, September 22, 2015

30இல் மீன் உணவு தயாரித்தல் இலவசப் பயிற்சி


தூத்துக்குடி தருவைக்குளத்தில் செப். 30ஆம் தேதி நடைபெற உள்ள மீன் உணவு தயாரித்தல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின்கீழ் தருவைக்குளத்தில் செயல்படும் கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையில் பண்ணை சார்ந்த மீன் உணவு தயாரித்தல் குறித்த ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் செப். 30ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியில் மீனுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், மீன் உணவு தயாரிக்க தேவையான தாவர மற்றும் விலங்கின மூலப்பொருள்கள் தேர்ந்தெடுத்தல், தேர்ந்தெடுத்த மூலப்பொருள்களை நன்றாக அரைத்தல், மீன் உணவு பிழிந்தெடுக்க பயன்படும் கருவிகள், மிதவை மற்றும் மூழ்கும் மீன் உணவு தயாரித்தல், காய வைத்தல், மீன் உணவின் தரக்கட்டுப்பாடு, உற்பத்தி செலவின கணக்கீடு குறித்த தொழில்நுட்ப வகுப்பு மற்றும் செயல்விளக்கப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் செப். 29ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பேராசிரியர் மற்றும் தலைவர்,  கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,  தருவைகுளம், தூத்துக்குடி - 628 105 என்ற முகவரியிலோ அல்லது 0461-2277424 மற்றும் 2340554 தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/edition_thirunelveli/tuticorin/2015/09/22/30%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5/article3040269.ece

No comments:

Post a Comment